4-1.. சவுத் ஆப்பிரிக்கா டீம் செம அடி நம்ம கிட்ட வாங்கும்.. 2 பேர் வந்ததும் சம்பவம் உறுதி – ஸ்ரீகாந்த் நம்பிக்கை

0
265
Srikanth

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 எனக்கு கைப்பற்றும் என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக தோற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முடிவுக்கு வந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி முதல் துவங்குகிறது.

- Advertisement -

இரண்டு வீரர்கள் போதும்

இது குறித்து பேசி உள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பும்ரா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியை முடித்து வைத்தார்கள். அப்போது கிளாஸன் வெறித்தனமாக விளையாடிக் கொண்டிருந்தார். தென் ஆப்பிரிக்கா சிறப்பான நிலையில் இருந்தது. இந்த இருவரும் சேர்ந்து நான்கு பந்துகளில் அந்த அணியை முடித்தார்கள். மேலும் அக்சர் படேல் வருகிறார். எனவே இந்திய அணி வலிமையாக இருக்கிறது”

“இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை விட வலிமை வாய்ந்தது. அவர்களிடம் ரபாடா இல்லாததால் அவர்களுடைய பௌலிங் யூனிட் மிகவும் பலவீனமாக இருக்கிறது. நேற்றும் கூட இந்திய அணி 270 ரன்னை ஒரு விக்கெட் இழப்புக்கு அடித்தது. இந்திய பவுலிங் யூனிட் உடன் அவர்களை ஒப்பிட முடியாது. அவர்கள் 350 ரன்னை இந்தியாவுக்கு எதிராக துரத்தினார்கள். ஆனால் பும்ரா, ஹர்திக் பாண்டியா வந்தவுடன் அதை செய்ய முடியுமா?”

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் வேண்டும்

“இந்திய அணி ஒரு அருமையான டி20 அணி. இவர்களிடம் தேவையான எல்லாமே இருக்கிறது. ஆனால் இந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்க வேண்டும். அவர் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அவருக்கு ஒருமுறை இங்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க : ரோகித், கோலி உள்ளூர் போட்டியில் விளையாட தேவையில்லை.. ஒரு பயிற்சி செஷனே போதும்.. சஞ்சய் பங்கர் கருத்து

“டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய டி20 அணியில் ஒரு முறை பார்க்க வேண்டும். அவர் அதிரடியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். அவர் இங்கு இல்லாதது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால் இந்திய அணி மிகவும் வலிமையாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -