தற்போது 14 வயதான இந்திய உள்நாட்டு இளம் வீரர் வைபவ் சூரியவன்சியை சீக்கிரத்தில் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கோரிக்கை வைத்திருக்கிறார்.
நேற்று விஜய் ஹசாரே தொடரில் அருணாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 84 பந்தில் 190 ரன்கள் குவித்து மிரள வைத்திருக்கிறார். இந்திய அண்டர் 19 அணி மற்றும் இந்திய ஏ அணி, பீகார் மாநில அணி என எல்லாவற்றிற்காகவும் விளையாடி எல்லா வகையான தொடர்களிலும் சதம் அடித்திருக்கிறார்.
சீக்கிரம் இந்திய அணியில் சேருங்கள்
“நேற்று வைபவ் சூரியவன் சி அருணாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிராக அதிரடி சதத்தை அடித்திருக்கிறார். எந்த அணிக்கு எதிராக அடித்தாலும் அது பெரிய விஷயம்தான். நான் முன்பிருந்தே அவரை இந்திய அணியில் சேர்ப்பதற்கு ஃபாஸ்ட் ட்ராக் செய்யப்பட வேண்டும் என்று கேட்டு வருகிறேன். இது கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் கூட இந்த வேலையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்”
” மக்கள் அந்தப் பையனை இன்னும் கொஞ்ச காலம் இப்படியே விடுங்கள் அதைச் செய்யட்டும் இதைச் செய்யட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சச்சினும் இதே வயதில் இந்திய அணிக்கு வந்துவிட்டார். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் எல்லா தொடர்களிலும் சதம் அடித்த பிறகு இந்திய அணிக்கு வந்தார். இந்தப் பையனாலும் அதைச் செய்ய முடியும்”
டிராவிட் செய்வதாக கேள்விப்பட்டேன்
“அவர் எந்தெந்த இடங்களில் சதம் அடித்து இருக்கிறார் என்று நீங்கள் பாருங்கள். அவர் ஐபிஎல் தொடரில் சதம் அடித்த பொழுதே நான் அவரை இந்திய அணிக்குள் சீக்கிரம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி இருந்தேன். தற்போது ராகுல் டிராவிட் இந்த கோரிக்கையை வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த பையனுக்கு சிறந்த திறமை இருக்கிறது”
இதையும் படிங்க: பீட்டர்சன் கூட என்னை அப்படி அடிக்கல.. ஆனா இஷான் கிஷான் அதை செய்தார் – ஹர்பஜன் சிங் பேச்சு
” அபிஷேக் ஷர்மாவும் இந்தப் பையனும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவதை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அல்லது அபிஷேக், இஷான் கிஷான் இல்லை இந்தப் பையன் மற்றும் இஷான் கிஷான் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். இப்படியானவர்கள் விளையாடினால் முதல் ஆறு ஓவரிலேயே எதிரணியிடமிருந்து ஆட்டத்தை பறித்து உங்களிடம் கொடுத்து விடுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.






