பீட்டர்சன் கூட என்னை அப்படி அடிக்கல.. ஆனா இஷான் கிஷான் அதை செய்தார் – ஹர்பஜன் சிங் பேச்சு

0
48
Harbhajan

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் உயரம் அதிகமான இங்கிலாந்தின் பீட்டர்சன் தனது பந்துவீச்சில் அதிரடியாக அடித்ததை விட, உயரம் குறைவான இஷான் கிஷான் மிகச் சிறப்பாக அடித்திருக்கிறார் என ஹர்பஜன் சிங் பாராட்டி இருக்கிறார்.

நடந்து முடிந்த சையத் முஸ்டாக் அலி தொடரில் ஜார்க்கண்ட் அணிக்காக 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து, மேலும் கேப்டனாக வழி நடத்தி அந்த அணியை தொடரையும் வெல்ல வைத்து இஷான் கிஷான் சாதித்தார். இதன் காரணமாக அவர் தற்போது டி20 உலகக் கோப்பை இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கிறார்.

- Advertisement -

நான் முன்பே கண்டுபிடித்தேன்

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “இஷான் கிஷான் உயரத்தில் குறைவானவர் ஆனால் பெரிய ஷாட்களை அடிக்கக் கூடியவர் என நான் முன்பே கண்டு கொண்டிருந்தேன். மும்பையில் ஒரு ஷோ மேட்ச்சில் விளையாடுவதற்கு நான் வந்திருந்தேன். அப்பொழுது அவர் எனக்கு எதிராக விளையாடினார்”

” நான் அவருக்கு கொஞ்சம் ஆரம்பத்தில் பந்தை மெதுவாக வீசினேன். அதை அவர் இறங்கி வந்து கவருக்கு பக்கத்தில் சிக்ஸர் அடித்தார். இனிமேல் இவருக்கு மெதுவாக வீச கூடாது என கொஞ்சம் வேகமாக வீசினேன். அப்பொழுது அவர் ரிவர்ஸ் ஸ்விட்ச் ஹிட் முறையில் மீண்டும் என்னை சிக்ஸருக்கு அடித்தார்”

- Advertisement -

பீட்டர்சன் கூட செய்யவில்லை

“சர்வதேச கிரிக்கெட்டில் உயரமான அதிரடியாக விளையாடக்கூடிய இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் கூட என்னுடைய பந்துவீச்சில் இந்த முறையில் விளையாடுவதற்கு துணியவில்லை. ஆனால் உயரம் குறைவான இஷான் கிஷான் என் பந்துவீச்சில் சாதாரணமாக அடித்தார்”

இதையும் படிங்க: நேத்து ரோகித் விராட் செஞ்ச இந்த 2 விஷயம் ரொம்ப முக்கியமானது.. எப்படியும் சதம் சதம்தான் – ஹர்பஜன் சிங் பாராட்டு

“நான் ஆரம்பத்தில் இருந்தே அவருடைய திறமை குறித்து தொடர்ந்து பேசி வந்திருக்கிறேன். ஆனால் இடையில் திடீரென அவர் இந்திய அணியில் இல்லாமல் போனார். இப்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு திரும்பி வந்திருக்கிறார். அவர் இங்கும் சிறப்பாக விளையாடுவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -