தற்போது இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை எப்படியாக எதிர்காலத்தில் அமையும் என இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரின் பேட்டிங் செயல்பாடும் மிக மோசமாக அமைந்திருந்தது. இந்த காரணத்தினால் அவர்களது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை தற்பொழுது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
தலைவிதியை நிர்ணயிக்கும் தொடர்
விராட் கோலியை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா கண்டிஷன் அவருக்கு மிகவும் சரியான ஒன்றாக இருக்கும். எனவே விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் ரன்கள் எடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. தனிப்பட்ட முறையில் அவர் சரியாக விளையாடினாலே இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம் உறுதி ஆகிவிடும்.
அதே சமயத்தில் ரோகித் சர்மா கேப்டனாக இருப்பதால் அவர் பேட்டிங்கில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டாலும் கூட, ஒட்டுமொத்த இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக அமைந்து, ஆஸ்திரேலியா அணியை வெல்ல முடிந்தால் மட்டுமே குறைந்தபட்சம் அவரது கேப்டன் பதவியாவது தப்பிக்க முடியும். எனவே தற்பொழுது ரோகித் சர்மா மீது கூடுதல் நெருக்கடி இருக்கிறது.
ரோகித் சர்மா இதனால் ஓய்வு பெறுவார்
இது குறித்து பேசி இருக்கும் ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “நீங்கள் முன்கூட்டியே சிந்திக்க தொடங்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாக செயல்படாவிட்டால் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று நான் நினைக்கிறேன். அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே அவர் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடலாம். அவர் நீண்ட காலம் இளமையாக இருக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்”
“இந்திய அணி படுதோல்வி அடைந்திருந்தாலும் குறைந்தபட்சம் ரோகித் சர்மாவுக்கு ஒரு தைரியம் இருந்தது. அவர் இப்படியான ஒரு தோல்விக்கு தன்னை பொறுப்பாளியாக அறிவித்தார். இந்த விஷயத்தில் அவர் மிகவும் தைரியத்துடன் செயல்பட்டார். இதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்”
இதையும் படிங்க : 42 ரன் 5 விக்கெட்.. போட்டியை பரபரப்பாக்கிய பாகிஸ்தான் அணி.. கம்மின்ஸ் கலக்கலில் ஆஸி வெற்றி.. முதல் ஒருநாள் போட்டி
“என்னுடைய கருத்துப்படி ஆஸ்திரேலியாவில் மீண்டும் சிறப்பாக விராட் கோலி விளையாட ஆரம்பிப்பார். ஏனென்றால் அவருடைய ஆட்ட பாணிக்கு ஆஸ்திரேலியா மிகவும் சரியாக இருக்கும். தற்போது விராட் கோலியை விட்டு இந்திய அணி வெளியேறுவது மிகவும் சீக்கிரமாக ஒன்று. விராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் நேரம் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.