42 ரன் 5 விக்கெட்.. போட்டியை பரபரப்பாக்கிய பாகிஸ்தான் அணி.. கம்மின்ஸ் கலக்கலில் ஆஸி வெற்றி.. முதல் ஒருநாள் போட்டி

0
341
Australia

தற்போது வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடியது. பரபரப்பான இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நசீம் ஷா அதிரடி

இன்று இந்த தொடரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் மிச்சல் மார்ஸ் ஆகியோர் இடம்பெறவில்லை. மேலும் கம்மின்ஸ் கேப்டனாக அணியை வழி நடத்தினார். பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் முகமது ரிஸ்வான் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபிக் 12, சைம் அயூப் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். தொடர்ந்து நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் 37, கேப்டன் முகமது ரிஸ்வான் 44 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து கம்ரன் குலாம் 5, ஆகா சல்மான் 12, இர்பான் கான் 22, ஷாகின் அப்ரிடி 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இதைத் தொடர்ந்து கடைசியில் அதிரடி காட்டிய நசீம் ஷா 39 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்தார். இவரது கடைசிக் கட்ட அதிரடியின் காரணமாக பாகிஸ்தான அணி 46.4 ஓவரில் 203 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 3, கம்மின்ஸ் 2, ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

சிறப்பாக துவங்கி சரிந்த ஆஸ்திரேலியா

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஷார்ட் 1, ஜாக் பிரேசர் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து வந்த ஸ்மித் 44, ஜோஸ் இங்லீஷ் 49 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியின் வெற்றியை மிகவும் எளிதானதாக காட்டினார்கள்.

ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்தில் 113 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து வலிமையான நிலையில் இருந்தது. இங்கிருந்து மேற்கொண்டு 42 ரன்கள் மட்டுமே எடுத்து லபுசேன் 16, மேக்ஸ்வெல் 0 விக்கட்டுகளை இழந்து, மொத்தமாக 155 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை பறி கொடுத்தது.ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் வந்தது.

இதையும் படிங்க : ருதுராஜின் இந்திய அணி.. எங்க ஆஸிகிட்ட ஜெயிக்கிறதுக்காக.. பந்தை சேதப்படுத்தினாங்க – இயான் ஹீலி குற்றச்சாட்டு

இதைத் தொடர்ந்து கேப்டன் கம்மின்ஸ் மற்றும் சீன் அப்பாட் ஜோடி சேர்ந்து 31 உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். சீன் அப்பாட் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து களத்தில் நின்ற கேப்டன் கம்மின்ஸ் ஆட்டம் இழக்காமல் 31 பந்தில் 32 ரன்கள் எடுத்து, பரபரப்பான போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 2, ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -