பாக் கேப்டன் கோச் வாயில ஆடறத நிறுத்துங்க.. ஷாகின் டென்னிஸ் பால் பவுலர் அபிஷேக்குக்கு – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
306
Shaheen

பாகிஸ்தான் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் இருவரும் வாயில் பேசுவதை நிறுத்தி விட்டு பேட் மற்றும் பந்தில் தங்கள் அணிவது பேச வைக்க வேண்டும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி முக்கிய விக்கெட்டுகள் அனைத்தையும் சீக்கிரத்தில் இழந்து, இறுதியாக ஷாகிர் அப்ரிடி 16 பந்தில் 33 ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் 127 ரன் எடுத்தது. இந்த இலக்கை இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 15.5 ஓவரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

கேப்டன் மற்றும் கோச் பேச்சு

நேற்று டாஸ் நிகழ்வின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் துபாயில் 20 நாட்களாக தங்கி இருந்து முத்தரப்பு தொடரில் விளையாடி மேலும் பயிற்சி பெற்று வந்தது தங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறினார். மேலும் தாங்கள் தொடர்ந்து நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருவதாகவும் அதை தொடர வேண்டும் என்றும் பேசி இருந்தார்.

இந்த போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் பயிற்சியாளர் உலகின் தலைசிறந்த சுழல் வீச்சாளராக தங்களுடைய முகமது நவாஸ் இருக்கிறார் என பேசியது பெரிய சர்ச்சையாக மாறியது. அப்போது இந்திய அணி பாகிஸ்தான் அனுப்பி எதிராக விளையாடி அவர்களது பலவீனத்தை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி காட்டி இருக்கிறது.

- Advertisement -

டென்னிஸ் பால் பவுலர்

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “ஷாகின் அப்ரிடிக்கு பிங்க் வேகம் எதுவுமே இல்லை. அவர் ஒரு பேட்ஸ்மேன் ஆக மாறிவிடலாம். அவர் மற்ற பாகிஸ்தான் வீரர்களை விட சிறப்பாக செய்கிறார். 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு இவர்கள் எப்படி வந்தார்கள்? என்று எனக்கு இப்போதும் புரியவில்லை. அப்ரிடியை அபிஷேக் ஷர்மா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போல விளையாடி வருகிறார். அவர் வேடிக்கையாக சிக்ஸர்கள் அடிக்கிறார். வீரர்கள் ஷாகினை சாதாரண பவுலராக குறைத்து விட்டார்கள்”

இதையும் படிங்க : இந்தியா எங்களை செஞ்சு விட்டத மறைக்க முடியாது.. மொத்தமா முடிச்சு விட்டுட்டாங்க – பாக் கோச் வெளிப்படை பேச்சு

“இவையெல்லாம் விட துபாயில் நீண்ட நாட்களாக இருந்து வருவதாக பாகிஸ்தான் கேப்டன் டாஸ் நிகழ்வில் பேசியிருந்தார். துபாயில் 20 நாட்கள் இல்லை 20 வருடங்கள் இருந்தாலும், இந்த மாதிரி ஒரு அணியால் உங்களால் வெற்றி பெற முடியாது. கேப்டனும் பயிற்சியாளரும் பெரிதாக பேசுகிறார்கள். அவர்கள் பேட் மற்றும் பந்தின் மூலமாகத்தான் பேச வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -