நடக்கவிருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி ஏதாவது சாக்குpபோக்கு கூறி கலந்து கொள்ள வேண்டாம் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்று இருக்கின்றன. மேலும் இரு அணிகளும் மோதிக் கொள்ளும் லீக் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை இந்தியா வராமல் அனைத்து போட்டிகளையும் இலங்கையில் வைத்து விளையாடுகிறது.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட அணியை அறிவித்து இருக்கிறது அதே சமயத்தில் அவர்கள் கலந்து கொள்வார்களா என்பது குறித்து இன்னும் முழுமையாக உறுதியாகவில்லை. ஆனால் அவர்கள் நிச்சயம் விளையாடுவார்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கூறி வருகிறார்கள்.
அதே சமயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஷேர்மேன் நக்வி பாகிஸ்தான் பிரதமர் தான் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். தேவைப்பட்டால் தாங்கள் கலந்து கொள்ளாமல் டி20 உலகக் கோப்பையை புறக்கணிப்பு செய்யவும் தயங்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “இரண்டாவது போட்டியில் 200க்கும் மேற்பட்ட ரன்னை 15 ஓவரிலும், மூன்றாவது போட்டியில் 150க்கும் மேற்பட்ட ரன்னை மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி துரத்தி இருக்கிறது. மற்ற அணிகள் இதை பார்த்து நீங்களே கோப்பையை வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் வரவில்லை என்று சொல்லலாம். பாகிஸ்தான் நீங்களும் வராதீர்கள். உங்களுடைய ஆள் நக்வி இது சம்பந்தமாக பேசியிருக்கிறார்”
இதையும் படிங்க : திலக் வர்மா சாதாரண பிளேயர் இல்ல.. என்கிட்ட அவர் இதைக் கேட்டுகிட்டே இருப்பார் – ரோகித் சர்மா பேட்டி
“நீங்கள் வந்தீர்கள் என்றால் அடிக்கப்படுவீர்கள். நாங்கள் கொழும்புவில் சிக்சர் அடித்தால் பந்து சென்னையில் வந்து விழும். எனவே ஏதாவது ஒரு சாக்குப்போக்கை கண்டுபிடித்து வர வேண்டாம். இந்திய வீரர்கள் கடுமையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்துவார்கள்” என்று கூறி இருக்கிறார்.