“கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து திடீர் விலகல்.. ரோகித்திடம் பேசியது என்ன?.. வெளியான காரணம்

0
568
Virat

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்த முறை மிக முக்கியமான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் மோதிக்கொள்ள இருக்கின்றன.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்குகிறது. ஐந்தாவது போட்டி மார்ச் மாதம் ஏழாம் தேதி இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட்டு தொடரில் இங்கிலாந்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில் தன்னுடைய அதிரடியான பேட்டிங் முறையை தொடருமா என்றும், விராட் கோலி இடம் எத்தனை சதங்களை எதிர்பார்க்கலாம் என்றும் நிறைய எதிர்பார்ப்புகள் நிலவியது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் குடும்ப காரணங்களுக்காக தொடரை விட்டு வெளியேறி இருந்தது அதிர்ச்சியாக இங்கிலாந்து தரப்பில் அமைந்திருந்தது.

இந்த நிலையில் இந்திய தரப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தனிப்பட்ட குடும்ப விவகாரங்களுக்காக விராட் கோலி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விலகி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கும் பொழுது ” கேப்டன் ரோஹித் சர்மா, அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களிடம் பேசிய விராட் கோலிதான் நாட்டிற்காக விளையாடுவதற்கு முக்கியத்துவம் தருவதாகவும், ஆனால் தற்போது தான் குடும்பத்துடன் இருக்க வேண்டிய கட்டாய சூழல் இருப்பதாகவும் கூறி தெளிவுபடுத்தி இருக்கிறார்.

பிசிசிஐ அவருக்கு தனது முழு ஆதரவை வழங்குகிறது. மேலும் வாரியம் மற்றும் அணி நிர்வாகம் முழுமையாக நட்சத்திர பேட்ஸ்மேனுக்கு ஆதரவை வழங்கி, டெஸ்ட் தொடரில் அவருடைய இடத்திற்கு சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் இருப்பதை உறுதி செய்கிறது.

இந்த நேரத்தில் விராட் கோலி அவர்களின் தனி உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். இது சம்பந்தமாக தேவையற்ற யூகங்கள் எதுவும் வேண்டாம் என பிசிசிஐ கேட்டுக்கொள்கிறது. வருகின்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடரை வெல்ல ஆதரிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறப்பட்டு இருக்கிறது.