பென் ஸ்டோக்ஸ் திரும்பி வரது கோலிக்குதான் முதல்ல சந்தோஷமா இருக்கும்.. காரணம் இதுதான் – இந்திய முன்னாள் வீரர் வெளியிட்ட தகவல்!

0
865
Viratkohli

தற்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் இரு வடிவத்திலும் சாம்பியன் அணியாக இங்கிலாந்து அணி இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இரண்டையும் இங்கிலாந்து அணி கைப்பற்றி இருக்கிறது!

சில மாதங்களுக்கு முன்னால் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் பணிச்சுமையின் காரணமாக தன்னால் இனி ஒரு நாள் கிரிக்கெட் விளையாட முடியாது என்று கூறி, ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். அதே சமயத்தில் டி20 கிரிக்கெட் இங்கிலாந்து அணியில் வீரராகவும், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ஆகவும் தொடர்கிறார்!

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு அவரை மீண்டும் இங்கிலாந்து அணிக்குள் எப்படியாவது கொண்டு வந்து விட வேண்டும் என்று, இங்கிலாந்து தேர்வு குழுவின் தலைவராக இருக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர் லூக் ரைட் முயற்சிகள் செய்து வந்தார். தற்போது அந்த முயற்சியில் அவர் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

இங்கிலாந்தில் உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெற இருக்கின்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் திரும்ப வந்திருக்கிறார். இது நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை நிச்சயம் பலப்படுத்தும் என்பதில் சந்தேகம் கிடையாது.

தற்பொழுது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” பென் ஸ்டோக்ஸ் மீண்டும் திரும்பி வருவார் என்றால் அதற்கு முதலில் சந்தோஷப்படக்கூடிய நபராக விராட் கோலிதான் இருப்பார். ஏனெனில் மிகக் குறிப்பாக அவர் விரும்பும் வீரர்களில் இவரும் ஒருவர். அழுத்தத்தில் அவரை விட யாரும் சிறப்பாக விளையாட மாட்டார்கள் என்று அவர் ஏற்கனவே அவரைப் பற்றி கூறியிருந்தார்.

- Advertisement -

உண்மையில் ஒரு தேர்வாளராக இருக்கும் லூக் ரைட்டும் விராட் கோலி சொன்னது போலவே அழுத்தத்தின் கீழ் அவரைவிட யாரும் சிறப்பாக விளையாடி விட மாட்டார்கள் என்கின்ற கருத்தைதான் கூறியிருந்தார். மற்றவர்கள் அழுத்தத்தின் கீழ் விழுந்தாலும் இவர் மட்டும் தனியாக நின்று ஜொலிக்கிறார்.

ஆசஸ் தொடரில் அவரது கேப்டன் பொறுப்பு உத்வேகமாக வெளிப்பட்டது. அழுத்தத்தின் கீழ் இன்னும் உத்வேகம் பெறுகிறார். இங்கிலாந்து அப்படியான ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறது. அவர் அழுத்தத்தில் வந்து நன்றாக பேட்டிங் செய்வார். மிடில் ஆர்டரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவார். ஆட்டத்தை நகர்த்துவார்.

அவர் பந்து வீச வேண்டும் என்கின்ற அவசியம் தற்பொழுது இருக்காது. அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் இருப்பார். அவர் அணிக்கு தேவைப்படும் நேரங்களில் நிலைத்து நின்று விளையாடி தருவது மட்டுமே அவருக்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் வேலையாக இருக்கும். அவரதை செய்வார்!” என்று கூறியிருக்கிறார்!