“கோலி கர்ஜிக்கும் புலி.. அனுபவத்துல சொல்றேன்.. அவர்கிட்ட இந்த தப்ப செய்யாதிங்க” – இங்கிலாந்து லெஜன்ட் ஸ்பின்னர் பேச்சு!

0
214
Virat

மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியா வந்த இங்கிலாந்து அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடரை இரண்டுக்கு ஒன்று என வென்று அசத்தி காட்டியது.

ஆசியா தாண்டிய வெளிநாட்டு அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. இருப்பதிலேயே ஒரு டெஸ்ட் தொடரை வெல்வதற்கு மிகவும் கடினமான இடம் வெளிநாட்டு அணிகளுக்கு இந்தியாதான்.

- Advertisement -

இந்திய சூழ்நிலைகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் வீழ்த்த முடியாத சக்தி கொண்டவர்கள். எதிராணிகளை தங்களுடைய இஷ்டத்துக்கு விளையாட வைத்து முடக்கி போடக் கூடியவர்கள்.

இந்தியாவில் அமைக்கப்படும் சுழல் பந்துவீச்சு ஆடுகளங்களை சமாளிக்க வெளிநாட்டு பேட்ஸ்மேன்களுக்கு எந்தவித முன் அனுபவமும் இருக்காது. அவர்கள் இங்கு ஒரு அனுபவத்தை எடுத்துக் கொண்டு போகத்தான் வருவார்கள். வெற்றி பெறும் நோக்கமே இருக்காது.

ஆனால் அப்போது வந்த இங்கிலாந்து அணி இந்தியாவில் தொடரை வென்றது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. இங்கிலாந்து தொடரை வெல்வதற்கு இடது கை சுழற் பந்துவீச்சாளர் மாண்டி பனேசர் மற்றும் வலது கை சுழற் பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் இருவரும் மிக முக்கிய காரணமாக இருந்தார்கள்.

- Advertisement -

இந்தக் கூட்டணியில் ஒருவரான கிரேம் ஸ்வான் விராட் கோலிக்கு எதிராக என்ன செய்யக்கூடாது என்பது குறித்தும், அப்படி செய்த பொழுது தங்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் மிக சுவாரசியமான தகவல் ஒன்றைக் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “விராட் கோலி இடம் எந்தவிதமான ஸ்லெட்ஜிங்கும் செய்யக்கூடாது என்று எங்கள் அனைவருக்கும் ஆரம்பத்திலேயே விளையாடும் பொழுது சொல்லப்பட்டிருந்தது.

எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவன் பின் இரண்டு பவுண்டரிகள் கொடுத்தார். அந்த நேரத்தில் அவர் நிதானம் இழந்து, ஏற்கனவே சொல்லப்பட்டதை மறந்து, விராட் கோலியிடம் ஏதோ பேசி விட்டார்.

அப்பொழுதே அவர் உடனே தனது தவறை உணர்ந்தும் விட்டார். அந்த நேரத்தில் விராட் கோலி புலி போல கர்ஜித்தார். பிறகு ஸ்டீவன் பின் மைதானத்தில் எல்லா பக்கத்திலும் அடித்து நொறுக்கப்பட்டார். விராட் கோலி இடம் எப்பொழுதும் பேசக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.