தற்பொழுது இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று இருந்த நிலையில், இன்று தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டியில் டாசை வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் இந்திய அணியில் ருத்ராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, இவர்களது இடத்தில் ரஜத் பட்டிதார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் விளையாடினார்கள்.
துவக்க வீரராக வந்த ரஜத் பட்டிதார் அதிரடியாக அதிரடியாக பதினாறு பந்தில் 22 ரன்கள், சாய் சுதர்சன் 10, கே எல் ராகுல் 21 என அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி நெருக்கடியில் சிக்கியது.
இந்த நிலையில் ஜோடி சேர்ந்த விளையாடிய சஞ்சு சாம்சங் மற்றும் திலக் வர்மா இருவரும் இந்திய அணியை சிறப்பான முறையில் மீட்டார்கள். இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது.
எனவே இந்த ஜோடி பொறுமையாக விளையாடி ஸ்கோர் கொண்டு வந்தது. ஒரு முனையில் சஞ்சு சாம்சன் அரைசதத்தை கடந்தார். இது அவருக்கு நான்காவது அரை சதமாக அமைந்தது.
இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா தன்னுடைய முதல் ஒருநாள் கிரிக்கெட் அரை சதத்தை அடித்தார். அவர் 77 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் நடந்தார்.
இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்த மண்ணில் அரைசதம் அடித்ததின் மூலமாக, குறைந்த வயதில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதன் மூலம் சாய் சுதர்ஷன், விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியவரது சாதனையை முறியடித்திருக்கிறார்.
திலக் வர்மா 21 வருடம் 43 நாட்கள்
சாய் சுதர்சன் 22 வருடம் 63 நாட்கள்
விராட் கோலி 22 வருடம் 68 நாட்கள்
ராகுல் டிராவிட் 24 வருடம் 22 நாட்கள்