“கோலி ODI-ல ரன் அடிக்கலாம்.. ஆனா டெஸ்ட்ல முடியாது.. சச்சின்தான் பெஸ்ட்!” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரபரப்பு பேச்சு!

0
135
Virat

இந்திய அணிக்கு அடுத்த இரண்டு மாதங்களில் விராட் கோலி குறைந்தபட்சம் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருப்பது அவரது ரசிகர்களை பெரிய உற்சாகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது!

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது பெரிய சர்ச்சையாகி வருகிறது. இதுபோலவே ஆசியக் கோப்பையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இதன் காரணமாக விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் அடித்துள்ள 49 சதங்களைத் தாண்டி உலகச் சாதனை படைக்க அவருக்கு இன்னும் மூன்று சதங்கள் மட்டுமே தேவை. அவர் தற்போது 47 சதங்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று விராட் கோலி பற்றி மிக முக்கியமான கருத்துகளை இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பிரபலமான கிரிக்கெட் வர்ணனையாளருமான மும்பையைச் சேர்ந்த சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“விராட் கோலி மற்றும் சச்சின் இருவருக்கும் இடையே உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால், இருவரும் கிரிக்கெட் விளையாடுவதை ரசிக்கிறார்கள். அவர்கள் களத்தில் இருக்க விரும்புகிறார்கள். அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. ஆனாலும் அவர் களத்தில் இருந்தார். விராட் கோலிக்குஅணியில் பதவிகள் வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

- Advertisement -

அவர் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். மேலும் அணியின் ஒரு அங்கமாக இருப்பதை ரசிக்கிறார். அவர் இந்திய அணிக்கு நீண்ட காலமாக கேப்டனாக இருந்திருக்கிறார். அவருக்குப் பெரிதாக நிறைவேறாத கனவுகள் இல்லை. அணியுடன் இருப்பது, வீரர்களுடன் பயணம் செய்வது, மைதானத்திற்கு செல்வது, வெற்றியின் ஒரு அங்கமாக இருப்பது, அவருக்கு அதிகாரத்தை விட முக்கியமானதாக இருக்கிறது.

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் நடித்திருக்கிறார். இது கவாஸ்கர் முடிக்கும் பொழுது எடுத்ததை விட 17 அதிகம். ஒரு நல்ல வீரருக்கு ஒப்பீட்டளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்கள் எடுப்பது சுலபமானதுதான். ஏனென்றால் விக்கெட்டை எடுப்பதற்கு குறிவைத்து பந்து வீசமாட்டார்கள்.

சச்சின் மற்றும் விராட் கோலி இருவருமே சிறந்தவர்கள்தான். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் எடுத்துள்ள 51 சதங்களை தாண்ட முடியும் என்று நான் நினைக்கவில்லை. அது மிகவும் கடினமானது!” என்று கூறியிருக்கிறார்!