சர்பராஸ் கானுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. 3வது டெஸ்டில் நட்சத்திர இந்திய வீரர் விலகல்

0
477
Sarfaraz

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்திய அணிக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டபடியே இருக்கிறது.

இதற்கான துவக்கம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போதே ஆரம்பித்துவிட்டது. முதலில் முகமது சமி காயத்தின் காரணமாக அந்த தொடரில் இடம் பெறவில்லை.

- Advertisement -

இதற்கு அடுத்து தொடர்ந்து அணியுடன் பயணித்து வருகின்ற காரணத்தினால் மனச்சோர்வாக இருக்கிறது என்று கூறி இசான் கிஷான் தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து ஓய்வு வாங்கி விலகினார்.

இது அப்படியே இங்கிலாந்து தொடருக்கும் தொடர்ந்து வந்து விராட் கோலி தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதோடு, கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகிக் கொண்டார்.

அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தின் காரணமாக வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில்தான் இரண்டாவது போட்டியில் காயத்தின் காரணமாக விளையாடாத கேஎல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அணிக்கு திரும்பினார்கள்.

- Advertisement -

தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு கே.எல்.ராகுல் முழு உடல் தகுதியுடன் இல்லை என்ற அறிவிப்பு வெளியில் வந்திருக்கிறது. மேற்கொண்டு அவருக்கு முழு உடல் தகுதி பெறுவதற்கு மேலும் ஒரு வாரம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக கேஎல் ராகுல் நான்காவது டெஸ்ட் போட்டிக்குதான் இந்திய அணிக்கு திரும்புவார். எனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் ரூல்டு அவுட் ஆகி இருக்கிறார்.

இதன் காரணமாக இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு விளையாடும் அணியில் இடம் கிடைப்பதோடு, அவருக்கு முதல் அறிமுகமும் இந்திய அணியில் கிடைக்க இருக்கிறது.

இதையும் படிங்க : “சிஎஸ்கே இல்ல.. இந்த டீம்க்குதான் விசுவாசமான ரசிகர்கள் அதிகம்” – இர்பான் பதான் கருத்து

உள்நாட்டில் நடைபெறும் தொடர்களில் பொதுவாக இளைஞர்கள் அறிமுகம் ஆவது அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. எனவே நாளைய போட்டியில் சர்பராஸ் கான் வாய்ப்பை பயன்படுத்தினால், உள்நாட்டில் தொடர்ந்து இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டியில் கிடைக்கும். மேலும் அதன் மூலம் அடுத்தடுத்து இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வாவதற்கும் இது உதவி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது!