என் ஆட்ட முறை மாற அவர்தான் காரணம்.. மணிக்கணக்கில் நாங்கள் பேசி தவறுகளை சரி செய்தேன் – கேஎல் ராகுல் பேட்டி

0
528

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.

இந்த சூழ்நிலையில் மாறிவரும் டி20 கிரிக்கெட் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

கேஎல் ராகுல் அபார பேட்டிங்

டி20 கிரிக்கெட் நாளுக்கு நாள் மெருகேறக் கொண்டே வருகிறது. சில ஐபிஎல் சீசன்களாக களம் இறங்கும் பேட்ஸ்மேன்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாடும் ஆட்ட முறையை பின்பற்றி வருகின்றனர். எனவே இப்போது எல்லாம் 200 ரன்கள் குவிப்பது என்பது மிகவும் சாதாரண விஷயமாகிவிட்டது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவை எதிர்த்து விளையாடிய டெல்லி கேப்பிடல் அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் குவித்தது.

டெல்லி அணியில் சிறப்பாக செயல்பட்ட தொடக்க வீரர் கேஎல் ராகுல் 51 பந்துகளை எதிர் கொண்டு 77 ரன்கள் குவித்தார். இந்த சூழ்நிலையில் மாறிவரும் டி20 கிரிக்கெட் குறித்து பேசிய கேஎல் ராகுல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக இருக்க கடினமாக உழைத்ததாக சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். டி20 கிரிக்கெட் பொருத்தவரையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பந்தை பார்த்து அடிப்பது மட்டுமே ஒரே எண்ணமாக வைத்திருப்பதாகவும் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவரோடு கடுமையாக உழைத்தேன்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “டி20 கிரிக்கெட் முற்றிலும் மாறிவிட்டது என்பதை நன்றாக உணர்ந்தேன். இதன் முக்கிய நோக்கம் பௌண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடிப்பது, ஆக்ரோஷமாகவும் பந்து வீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடிய விஷயமாகவும் மாறிவிட்டது. இதற்காக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரோடு கடுமையாக உழைத்தேன். மணிக்கணக்கில் அவரோடு உரையாடி எனது ஆட்ட முறையில் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைத்தேன்.

இதையும் படிமங்க:அஸ்வினின் இந்த விஷயம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.. நான் அதெல்லாம் பார்ப்பதில்லை – சிஎஸ்கே கோச் பேட்டி

இப்போது நான் எனது போட்டியை மிகவும் மகிழ்ச்சியாக ஆடி வருகிறேன். நான் போட்டி குறித்து எதுவும் ஆழமாக சிந்திப்பதே இல்லை. பந்துகளை பார்த்து ஆக்ரோஷமாக பௌண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடிக்க முயற்சிக்க வேண்டும் அதை மட்டுமே நோக்கமாக வைத்திருக்கிறேன்” என்று கேஎல் ராகுல் கூறியிருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே பிளே ஆப் சுற்றுக்கு செல்லக்கூடிய அணிகளில் டெல்லி அணியும் இடம்பெறும் என்று அதிக அளவு எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -