அஸ்வினின் இந்த விஷயம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.. நான் அதெல்லாம் பார்ப்பதில்லை – சிஎஸ்கே கோச் பேட்டி

0
173

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 லீக் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சிஎஸ்கே மூன்றாவது தோல்வி சந்தித்து இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் சிஎஸ்கே அணி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வினி யூட்யூப் சேனலில் எழுந்த விமர்சனங்கள் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சென்னை அணியின் தொடர் தோல்வி

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தொடர்ச்சியான தோல்வியும் முதல் போட்டியில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. இந்த தோல்விகளுக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுவது சென்னை அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. அதிரடியாக முன்னோக்கி எடுத்துச் சொல்லக்கூடிய பவர் ஹிட்டர்கள் சிஎஸ்கே அணிகள் இல்லாதது பெரிய பிரச்சனை ஆக உள்ளது.

இந்த சூழ்நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யூட்யூப் சேனலில் தங்களது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை பதிவு செய்து வரும் நிலையில் சிஎஸ்கே அணியில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வின் சொந்தமாக யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். தற்போது அவர் சிஎஸ்கேவில் விளையாடி வருவதால் கிரிக்கெட் அனலிஸ்ட் பீடாக் மற்றும் இந்திய முன்னாள் வீரர் வித்யூத் ஆகியோர் சிஎஸ்கே விளையாடினால் அதன் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்த விஷயங்களை ஆராய்ந்து பேசுவார்கள்.

- Advertisement -

அஸ்வினின் இந்த விஷயம் தெரியாது

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு சென்னை அணியின் பலவீனமான பேட்டிங் வரிசை முக்கிய காரணமாக உள்ளது என்று கூறியிருந்தனர். மேலும் அணியின் பேட்டிங்கில் கவனம் செலுத்தாமல் பந்துவீச்சில் அதிக விலை கொடுத்து வீரர்களை வாங்கி இருக்கிறார்கள் எனவும் விமர்சனம் செய்தனர். மேலும் சிஎஸ்கே ஸ்கவுடிங் அணியில் இருக்கும் வித்யூத் தான் பரிந்துரை செய்த அனிகேத் வர்மா, வதேரா போன்ற இளம் வீரர்களை சிஎஸ்கே வாங்க மறுத்துவிட்டது எனவும் கூறியிருந்தனர்.

இதையும் படிங்க:தோல்வி எங்களுக்கு தேவைதான்.. இனி நாங்க முழிச்சுக்கணும்.. இந்த தவறை சரி செய்யணும் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

இந்த சூழ்நிலையில் நேற்றைய தோல்விக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், அஸ்வினின் யூடியூப் சேனலில் வரும் விமர்சனங்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது “எனக்கு அந்த விஷயம் குறித்து எதுவும் தெரியாது. அஸ்வின் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருப்பது கூட எனக்கு தெரியாது. அதனால் நான் அந்த விஷயங்கள் குறித்து எதுவும் பின்பற்றுவதில்லை. அது அணியின் விஷயங்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாத ஒன்றாகும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -