என்னை வெளியேற சொல்றீங்களா?? பத்திரிகையாளர் சந்திப்பில் கேஎல் ராகுல் கோபம்

0
50

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசினார். தொடக்க வீரராக களம் இறங்கி அவர் 122 குவித்ததால் பலரும் டி20 உலக கோப்பையில் விராட் கோலியை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர் ஒருவர் இந்திய அணியின் துணை கேப்டன் கே எல் ராகுலிடம் கேள்வி எழுப்பினார். விராட் கோலி சதம் விளாசியதால் அவரை தொடக்க வீரராக இனி களம் இறக்குவீர்களா என்று அவர் கேட்டார்.

- Advertisement -

இதனால் கோபம் அடைந்த கே எல் ராகுல், அப்போது என்னை அணியை விட்டு வெளியே உட்கார சொல்கிறீர்களா என்று பதில் கேள்வி எழுப்பினார். இதனால் சற்று சலசலப்பு நிலவியது. இதனை தொடர்ந்து பேசிய கே எல் ராகுல் விராட் கோலி பார்முக்குத் திரும்பியது அணிக்கு பெரும் பலமாக கருதப்படுவதாக கூறினார். விராட் கோலி தொடக்க வீரராக மட்டுமல்ல எந்த பேட்டிங் வரிசையில் இறங்கினாலும் அவரால் சதம் விளாச முடியும் என்றும் கேல ராகுல் குறிப்பிட்டார்.

கே எல் ராகுலின் இந்த பதில் அவர் நெருக்கடியில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது .ரோகித் சர்மாவிடம் விராட் கோலி குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்டபோது விராட் கோலியை வெளியே அனுப்ப சொல்கிறீர்களா என்று பதில் அளித்தார். இதேபோன்று விராட் கோலியிடம் ரோகித் சர்மா ஃபார்மில் இல்லாத போது கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ரோகித் சர்மாவை வெளியே அனுப்ப சொல்கிறீர்களா என்று பதில் அளித்தார் .ஆனால் கே எல் ராகுல் இடம் விராட் கோலி பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு , என்னை அணியை விட்டு போக சொல்கிறீர்களா என்று பேசியது ரசிகர்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கேஎல் ராகுல் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் எந்த மறு பேச்சும் இல்லை. ஆனால் டி20 போட்டிகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் அணிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. உதாரணமாக ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளில் லக்னோ அணியின் கேப்டனாக விளையாடிய ராகுல் அரை சதல் அடித்தாலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிக குறைவாக இருந்தது. இது தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. தொடர்ந்து அதே போன்ற ஆட்டத்தை இந்திய அணிக்காகவும் ராகுல் விளையாடுவது தான் தற்போது அவருக்கு பின்னடைவை தருகிறது. ராகுல் தன்னுடைய ஸ்ட்ரைக் ரைட்டை அதிகப்படுத்தி அதிரடியாக விளையாடினால் அவருடைய இடத்திற்கு எந்த ஆபத்தும் வராது. தற்போது ஆஸ்திரேலிய எதிரான டி20 தொடரில் ராகுல் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்து அவருடைய எதிர்காலம் டி20 போட்டிகளில் இருக்கும்.

- Advertisement -