இந்திய கிரிக்கெட்

விராட் கோலியின் மேல் கோபப்பட்டது ஏன்.. களத்தில் அவரிடம் சொன்னது என்ன? – கேஎல்.ராகுல் வெளியிட்ட தகவல்

நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான செமி பைனல் போட்டியில் விராட் கோலி ஆட்டம் இழந்த பொழுது கேஎல்.ராகுல் வெளிப்படையாகவே தனது கோபத்தை வெளிப்படுத்தினார். தற்போது அது குறித்தான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று கேஎல்.ராகுல் பேட்டிங் செய்ய வந்த பொழுது இந்தியன் வெற்றிக்கு 90 பந்துகளில் 86 ரன்கள் தேவைப்பட்டது. அவர் விராட் கோலி உடன் இணைந்து 46 பந்துகளில் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த நேரத்தில் தேவையில்லாத ஷாட் விளையாடி விராட் கோலி ஆட்டம் இழந்த பொழுது தனது கோபத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.

களத்தில் தீட்டிய திட்டம்

2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிக மெதுவாக விளையாடியதாக இந்திய ரசிகர்களிடம் நேற்று வரையில் கேஎல்.ராகுல் மீது விமர்சனங்கள் இருந்து வந்தது. இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி கொடுக்கும் வகையில் நேற்று இறுதிவரை களத்தில் நின்று 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இது குறித்து பேசி இருக்கும் கேஎல்.ராகுல் கூறும் பொழுது “நான் நேற்று பேட்டிங் செய்ய வந்ததும் விராட் கோலி இடம் நீங்கள்தான் கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என்று கூறியிருந்தேன். மேலும் ஒரு ஓவரில் நாம் ஒருமுறை மட்டும் சான்ஸ் எடுக்கலாம் என்றும் அவரிடம் தெரிவித்திருந்தேன்”

- Advertisement -

கோபத்திற்கான காரணம்

“ஏனென்றால் எங்களுக்கு அந்த நேரத்தில் ஒரு ஓவருக்கு ஆறு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் ஆடுகளம் இருந்த நிலைமைக்கு ஒரு ஓவருக்கு ஆறு ரன்கள் என்பது எட்டு ரன்கள் போல தோன்றியது. எனவே நீங்கள் ஒரு ஓவருக்கு ஒருமுறை மட்டுமே சான்ஸ் எடுத்து பெரிய ஷாட் விளையாட முயற்சி செய்ய வேண்டும். ஒரு ஓவரில் ஒரு சிக்சர் அல்லது ஒரு பவுண்டரி எடுக்க வேண்டும்”

இதையும் படிங்க : விராட்டுக்கு அந்த செம 2 விஷயம் தெரியும்.. உங்களால அவரை எதுவும் செய்ய முடியாது – மைக்கேல் கிளார்க் பாராட்டு

“இந்தப் பொறுப்பை நானே எடுத்துக் கொண்டு செய்வதாக விராட் கோலி இடம் கூறியிருந்தேன். அதாவது பெரிய ஷாட் நானே விளையாடுவதாக கூறி இருந்தேன். ஏனென்றால் விராட் கோலி கடைசி வரையில் விளையாட வேண்டியது அவசியம். அவர் ஏற்கனவே நன்றாக செட் ஆகி இருந்தார். அவர் ஆட்டம் இழந்தால் கடினம் ஆகிவிடும். இதன் காரணமாகவே அப்படி கூறியிருந்தேன். இந்த நிலையில்தான் விராட் கோலி பந்து நன்றாக இருந்தது என ஆடி ஆட்டம் இழந்தார். ஆமாம் அவர் அதை சரியாக செய்யவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: KL Rahul