அணியில் இணைந்த கே.எல்.ராகுல்.. இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட வீரர்.. பாகிஸ்தான் போட்டிக்கு தயார் நிலை!

0
6159
Rahul

2023 இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு சில நாட்களுக்கு முன்பு 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது!

அறிவிக்கப்பட்ட இந்த அணி பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாக இல்லை. ஏனென்றால் தற்பொழுது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட அணியில் இருந்து 15 வீரர்கள் உலகக் கோப்பை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்!

- Advertisement -

தற்பொழுது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடருக்கு இந்திய அணி இலங்கை கிளம்பி வரும் பொழுது, இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கேஎல்.ராகுல் அணியுடன் வரவில்லை. அவருக்கு சிறிது நிகில் இருக்கின்ற காரணத்தினால், அவரை தேசிய கிரிக்கெட் அகாடமி தங்க வைத்து கண்காணிக்கும் என்று தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருந்தார்.

இந்த நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி உலகக் கோப்பை அணி அறிவிப்புக்கு முன்பாக, தேசிய கிரிக்கெட் அகாடமி கே.எல்.ராகுல் குணமடைந்து விட்டதாக அறிக்கை வெளியிட்டது. மேலும் அவர் முழு உடல் தகுதியை எட்டி, போட்டிகளில் பங்கேற்க தயார் நிலையில் உள்ளதாகவும் கூறி இருந்தது.

இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை இந்திய அணியில் கே.எல்.ராகுல் பெயர் முதன்மை விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டது. இந்த அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் இருக்கிறார்.

- Advertisement -

இதற்கு முன்பாக கேஎல்.ராகுல் அணியினருடன் ஆசிய கோப்பைக்கு இலங்கை வராத காரணத்தினால், பேக்கப் விக்கெட் கீப்பராக ஆனால் 17 பேர் கொண்ட அணியில் இடம் தராமல், ரிசர்வ் வீரராக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தார்.

தற்பொழுது கே.எல்.ராகுல் முழுதாக உடல் தகுதியை எட்டி இந்திய அணி உடன் இணைந்து விட்ட காரணத்தினால், சஞ்சு சாம்சனை இந்தியா திருப்பி அனுப்பி விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்திருக்கிறது.

மேலும் அவர் பேக்கப் விக்கெட் கீப்பராக ஆசியக் கோப்பையில் தொடர்ந்த காரணத்தினால், ருதுராஜ் தலைமையிலான ஆசிய விளையாட்டு போட்டி இந்திய அணியிலும் அவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!