கேட்ச் மிஸ் செய்த ராகுல்… பிடிக்காததற்கு என்ன காரணத்தை சொன்னார் தெரியுமா?

0
7053

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. கடைசி விக்கெட்டுக்கு வங்கதேச அணி 51 ரன்கள் சேர்த்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது .இந்த நிலையில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மெகதி ஹசன் அடித்த பந்தை கே எல் ராகுல் பிடிக்காமல் மிஸ் செய்தார். இது ஆட்டத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது .

- Advertisement -

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கே எல் ராகுல் கிரிக்கெட் என்றால் அப்படித்தான் இருக்கும் என்று கூறினார் .எதிர்பார்க்காதது நடந்தால் தான் அது கிரிக்கெட் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கும் என்றும் கேல் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். வங்கதேச வீரர்கள் கடைசி கட்டத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதாக ராகுல் பாராட்டினார்.

தாம் 50 ஓவரையும் நின்று விளையாடி இருந்தால் நிச்சயம் இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் என்று குறிப்பிட்ட ராகுல், 40 ரன்கள் நாங்கள் குறைவாக அடித்ததே தோல்விக்கு காரணம் என்று தெரிவித்தார். தன்னுடைய பேட்டிங் மகிழ்ச்சி அளித்ததாக சுட்டி காட்டிய ராகுல் , அணி தம்மிடம் என்ன கேட்கிறதோ அதை தொடர்ந்து செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.ரிஷப் பண்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து தனக்கு போட்டி தொடங்குவதற்கு முன்பு தான் தெரியும் என்று உண்மையை கூறிய ராகுல், அப்போது விக்கெட் கீப்பிங் செய்ய அணி நிர்வாகம் தம்மை கேட்டது ,உடனே நானும் ஒப்புக்கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.

நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் ஏற்கனவே விளையாடிய அனுபவம் இருந்ததால் அது தமக்கு கை கொடுத்தது என்றும் ராகுல் தெரிவித்தார். இனி வரும் காலங்களிலும் அணி நிர்வாகம் தம்மை விக்கெட் கீப்பிங் செய்ய சொன்னால் அதையும் செய்ய தாம் தயாராக இருப்பதாகவும் ராகுல் தெரிவித்தார். கடந்த ஆறு ஏழு மாதங்களில் இந்திய அணி பெரியதாக ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை என்பதை சுட்டி காட்டிய ராகுல், அடுத்த இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -