சச்சின், சேவாக், முரளி விஜய் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ள கே.எல்.ராகுல் – தென் ஆப்ரிக்காவில் அபார சதம்

0
2753
Sachin Sehwag and KL Rahul

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இன்று முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 248 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 122* ரன்கள் குவித்து இன்னும் களத்தில் இருக்கிறார். அவருடன் இணைந்து ரஹானே 81 பந்துகளில் 40* ரன்கள் குவித்து களத்தில் நிற்பது குறிப்பிடத்தக்கது

கே எல் ராகுலுக்கு அடுத்தபடியாக இன்று அவருடன் களம் இறங்கிய மயங்க் அகர்வால் 123 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இன்று இந்திய அணியில் ஒன் டவுன் பேட்ஸ்மேனாக விளையாடிய புஜாரா முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். கேப்டன் விராட் கோலி 35 ரன்களில் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடுக்கடுக்கான சாதனைகளை நிகழ்த்தி காட்டியுள்ள கே எல் ராகுல்

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக இன்று கேஎல் ராகுல் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த சதம் மூலமாக செனா ( தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் ) நாடுகளில் இந்த 21ஆம் நூற்றாண்டில் அதிக சதங்கள் குவித்துள்ள இந்திய பேட்ஸ்மேன் என்கிற பிரமாண்ட சாதனையை படைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் டெஸ்ட் ஓபனிங் பேட்ஸ்மேன் மத்தியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சதம் அடித்த முதல் வீரர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் இதுவரை 7 சதங்கள் குவித்துள்ளார். அதில் ஒரே ஒரு சதம் மட்டும் இந்திய மண்ணில் அடித்ததாகும். மற்ற ஆறு சதங்கள் அனைத்தும் இந்தியாவைக் கடந்து வெளி மண்ணில் அடித்த சதங்கள் ( இங்கிலாந்தில் 2 சதம், மேற்கிந்திய தீவுகளில் ஒரு சதம், இலங்கையில் ஒரு சதம், ஆஸ்திரேலியாவில் ஒரு சதம், தென்னாப்பிரிக்காவில் இன்று ஒரு சதம் ) என்பது குறிப்பிடத்தக்கது.

இவை மட்டுமின்றி இந்தியாவைக் கடந்து வெளி மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக முதல்நாளிலேயே சதமடித்த இந்திய வீரராக முரளி விஜய் மட்டுமே இருந்து வந்தார். அவர் 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ( முதல் நாளில் 122* ரன்கள் )அந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். இன்று 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது சாதனையை கேஎல் ராகுல் தென்னாப்பிரிக்க மண்ணில் ( முதல் நாளில் அதே 122* ரன்கள் ) சமன் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -