கோப்பையை வாங்கியது கேஎல்.ராகுல்.. உயர்த்தியது சௌராஷ்டிரா அணி வீரர்கள்.. நெகிழ்வான காரணம்!

0
7308
ICT

இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்திருந்த பொழுதும், முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றியது.

நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தவிர்க்க முடியாத சில காரணங்களால் சில வீரர்கள் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்கள், சில வீரர்களுக்கு உடல் நலமில்லை, எனவே தற்போது அணியில் 13 வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று விளையாடும் அணியில் இசான் கிஷான் துவக்க வீரராக இடம் பெறுவார் என்று எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால் அவர் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை. அவருக்கு வைரல் காய்ச்சல் என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருந்தார்.

இதன் காரணமாகவே உலகக் கோப்பை திட்டத்தில் இல்லாத வாஷிங்டன் சுந்தருக்கு விளையாடும் வாய்ப்பை கொடுத்தார்கள். காரணம் அவரை துவக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் நினைத்தது. ஏனென்றால் அப்பொழுதுதான் மற்ற வீரர்கள் விளையாடும் இடம் மாறாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 13 பேர் மட்டுமே இருந்த நிலையில், அதில் இஷான் கிஷானும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காரணத்தினால், வெளியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே உடல் நலத்தோடு இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக வீரர்கள் மைதானத்தில் விளையாடும் பொழுது, அவர்களுக்குத் தேவையான விஷயங்களை கொண்டு சென்று கொடுப்பதற்கு, இந்திய அணியில் வீரர்கள் இல்லை. எனவே போட்டி நடைபெறும் சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசனில் இருந்து, அந்த அணிக்காக விளையாடும் வீரர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் இந்திய அணி வீரர்களுக்கு மைதானத்தில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தண்ணீர் போன்றவற்றை கொண்டு சென்று கொடுத்தனர்.

இந்த நிலையில் இன்று கடைசிப் போட்டி தொடரில் முடிவடைய தொடரை வென்ற இந்திய அணிக்கு கோப்பையை கொடுக்கும் நிகழ்வின்போது, கோப்பையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெறவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் கேப்டனாக இருந்து, போட்டிகளை வென்ற கேஎல்.ராகுலை அழைத்து அவர் கையில் கோப்பையைக் கொடுக்கச் சொன்னார்.

அதேபோல் வெல்லும் கோப்பையை அணியின் இளம் வீரர்களிடம் கொடுத்து கொண்டாடுவது மகேந்திர சிங் தோனி அறிமுகப்படுத்திய பழக்கம். அவருக்குப் பின்னும் இந்த பழக்கம் இந்திய அணியில் தொடர்கிறது. தற்பொழுது சௌராஷ்டிரா அணி வீரர்கள் இந்திய அணி வீரர்களுக்காக வந்ததால், அவர்களை கௌரவிக்கும் பொருட்டாக அவர்கள் கையில் கோப்பையை இந்திய அணியினர் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!