இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் கேஎல்.ராகுல் பெரிய சதம் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் கடந்த போட்டியில் இருந்து எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
வாய்ப்பை நழுவ விட்ட பஞ்சாப்
இந்த போட்டியில் டெல்லி தொடக்க ஆட்டக்காரர் கேஎல்.ராகுல் ஆரம்பத்திலேயே கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ஷஷான்க் சிங் தவறவிட்டார். இது போட்டியின் பின்பகுதியில் பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய தலைவலியை உருவாக்கியது.
இந்த நிலையில் ஒரு முனையில் சுமாராக தொடங்கிய பதும் நிஷாங்கா 7 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து கேஎல்.ராகுல் உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பஞ்சாப் பந்துவீச்சை மைதானம் எங்கும் ஆரம்பம் முதல் அடித்து நொறுக்க ஆரம்பித்தது.
சாதனை பார்ட்னர்ஷிப்
சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 47 பந்தில் சதம் அடித்தார். இன்னொரு முனையில் நிதிஷ் ராணா 44 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதிவரை களத்தில் நின்ற கேஎல்.ராகுல் 67 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 151 ரன்கள் குவித்தார். இறுதியாக டெல்லி இரண்டு விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க : ஹர்பஜன் சிங் திரும்ப அசிங்கமா நடந்துக்கிறார்.. எனக்கே போன் பண்ணி சொல்றாரு.. இனி மன்னிக்க முடியாது – ஸ்ரீசாந்த் கோபம்
கேஎல்.ராகுல் ஐபிஎல் தொடரில் 150 ரன்கள் தாண்டி எடுத்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார். இதற்கு முன்பாக அபிஷேக் ஷர்மா 141 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இந்திய வீரரின் ரன்னாக இருந்தது.






