கேஎல் ராகுல் vs சுப்மன் கில் யாருக்கு வாய்ப்பு.. பிசிசிஐ வெளியிட்ட வீடியோவால் குழுப்பம்

0
134

இந்திய கிரிக்கெட்டில் கடந்த ஒரு வாரமாக செய்தியில் அடிபட்ட பெயர் என்றால் அது கே எல் ராகுல் தான். அதற்கு காரணம் அவர் செய்த வரலாற்று சாதனைகள் அல்ல என்பதுதான் கொஞ்சம் வருத்தமான விஷயம். கேஎல் ராகுல் தற்போது மோசமான பார்மில் இருக்கிறார். நாக்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 71 பந்துகளை எதிர்கொண்ட கேஎல் ராகுல் வெறும் இருபது ரன்களை மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 17 மற்றும் ஒரு ரன்கள் மட்டுமே கே.எல் ராகுல் எடுத்தார். இதனால் கே எல் ராகுலை அணியை விட்டு நீக்க வேண்டும் என பல்வேறு விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கே எல் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லை சேர்க்க வேண்டும் என வெங்கடேஷ்  பிரசாத், ஸ்ரீகாந்த் போன்ற வீரர்கள் கோரிக்கை விடுத்த வருகின்றனர்.

இந்த நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தூரில் வலைப்பயிற்சியின் போது இந்திய அணி வீரர்கள் வருவதற்கு முன்பே களத்திற்கு சுப்மன் கில் வந்து பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதை அடுத்து சுப்மன் கில்லுக்கு  தான் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் கொஞ்ச நேரத்திற்கு பிறகு கே எல் ராகுல் வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இருவரும் போட்டி போட்டு நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர். இதனை பார்த்ததும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் யாருக்கு தான் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப் போகிறார்கள் என்று குழப்பத்தில் உள்ளனர்.

- Advertisement -

எனினும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் கூற்றுப்படி கே எல் ராகுல் தான் தொடக்க வீரராக முதல் மரியாதை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று காயத்திலிருந்து மீண்டும் திரும்பி வந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயரும் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். முதலில் டெல்லி டெஸ்ட் போட்டியில் 22 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த கே எஸ் பரத் விக்கெட் கீப்பராக மூன்றாவது டெஸ்ட் போட்டிகளும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடுகளத்தில் தற்போது வரை சிறிய அளவில் புற்கள் இருந்தாலும் அது வெயிலின் தாக்கம் காரணமாக காய்ந்து சுழற் பந்துவீச்சுக்கு தான் சாதகமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு ஆடுகளங்களை காட்டிலும் இந்தூரில் பந்தின் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.