மிட்சல் ஸ்டார்க்கை பொளந்து கட்டிய ரிங்கு சிங்.. 20வது ஓவரில் 20 ரன்.. மாஸ் பினிஷிங்

0
1944
Rinku

2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனில் சத்தம் இல்லாமல் பலமான அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருந்து வருகிறது. இந்த முறை அவர்கள் ஐபிஎல் தொடரில் சாதித்தால் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானம் மீண்டும் பழைய முறையில் மெதுவாகவும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் மாற்றப்பட்டு இருந்தது. இது தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரிய சாதகமாக மாறுகிறது.

- Advertisement -

அந்த அணியில் மிகத் தரமான ஸ்பின்னர்களான சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி சுயாஷ் சர்மா ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் பேக்கப் ஸ்பின்னர்களாக ஆப்கானிஸ்தானின் முஜிப் மற்றும் இந்திய அனுக்குல் ராய் இருக்கிறார்கள். மேலும் ஒரு இந்திய பேட்டர் குறைவாக இருக்க அதற்கு தற்பொழுது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வந்திருக்கிறார்.

மேலும் அந்த அணிக்கு கடந்த ஆண்டில் இறுதிக்கட்ட பந்துவீச்சுக்கு ஆள் இல்லாமல் இருந்தது. இதற்காக ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க்கை ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கி வந்தது. இப்படி அந்த அணியின் பலவீனமாக இருந்த எல்லா பகுதிகளும் நிரப்பப்பட்டு இருக்கிறது. மேலும் மைதானம் பலமானதாக மாறியிருக்கிறது. எனவே அந்த அணி இந்த ஐபிஎல் தொடரில் சத்தம் இல்லாமல் பலமான அணியாக எழுந்து நிற்கிறது.

பட்டையைக் கிளப்பிய ரிங்கு சிங்

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சி முகாமில், இறுதிக்கட்ட பயிற்சிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட பயிற்சிகள் முடிவடைந்து தற்பொழுது அணியை இரண்டாக பிரித்து விளையாடும் பயிற்சி ஆரம்பித்து இருக்கிறது.

- Advertisement -

இப்படியான பயிற்சி போட்டியில் ரிங்கு சிங் மிட்சல் ஸ்டார்க் பந்துவீச்சை விளாசித் தள்ளும் வீடியோ வெளிவந்து இருக்கிறது. 19 ஓவர்களில் ரிங்கு சிங் அணி 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி ஓவரை மிட்சல் ஸ்டார்க் வீசுகிறார், அதை பேட்டிங் முனையில் இருந்து ரிங்கு சிங் சந்திக்கிறார்.

இதையும் படிங்க : ஆர்சிபிக்கு கோச்சா வந்ததுக்கு முக்கிய காரணம் இதான்.. இப்படித்தான் விளையாட போறோம்- ஆன்டி ஃபிளவர் பேட்டி

இந்த வீடியோவில் முதல் பந்தை ஸ்கொயர் லெக் பகுதியில் அபாரமாக ரிங்கு சிங் சிக்ஸருக்கு அனுப்புகிறார். இதற்கு அடுத்து இருபதாவது ஓவரின் கடைசிப் பந்தை ஆப்-சைடு எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரி அடிக்கிறார். இறுதியாக இருபதாவது ஓவர் முடியும் பொழுது ரிங்கு சிங் அணி 188 ரன்கள் சேர்க்கிறது. அதாவது ரிங்கு சிங் சந்தித்த மிட்சல் ஸ்டார்க்கின் கடைசி ஓவரில் 20 ரன்கள் வந்திருக்கிறது. ஃபினிஷர் ஆக ரிங்கு சிங்கின் கலக்கல் பயிற்சி ஆட்டத்திலும் பட்டையைக் கிளப்புகிறது!