நான் ஜெயிக்க காரணம் இந்த இந்திய வீரர்.. குழந்தையில் இருந்தே என்கூட இருக்கிறார் – கேகேஆர் ரகுவன்ஷி பேட்டி

0
19

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிட்டல் ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணியின் அங்கிரிஷ் ரகுவன்ஷி தனது வெற்றி குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சொந்த மைதானமான விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இதன்படி களமிறங்கிய பில் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் கணக்கை துவங்கினர். இருப்பினும் பில் சால்ட் 18 ரன்கள் ஆட்டம் இழக்க 18 வயதான இளம் இந்திய வீரர் அன்கிஷ் ரகுவன்சி களம் இறங்கினார். 27 பந்துகளை எதிர்கொண்ட அவர் டெல்லி அணியின் பந்துவீச்சை சரமாரியாக விலாசினார்.

- Advertisement -

27 பந்துகளை எதிர்கொண்ட இவர் ஐந்து பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் என 54 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதிலும் அவர் அடித்த ஸ்வீப் ஷாட் சிக்ஸர் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தது. அதன் பிறகு களம் இறங்கிய ரசல் மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடியான ஆட்டத்தினால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 272 ரன்கள் குவித்தது. இதன் பிறகு 273 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது.

இலக்கு பெரிது என்பதால் டெல்லி அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட போய் விக்கெட்டுகளை விரைவாக இழந்தனர். இருப்பினும் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டெப்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதங்கள் அடித்தனர். ரிஷப் பண்ட் 55 ரன்களும் ஸ்டெப்ஸ் 54 ரன்கள் குவிக்க டெல்லி அணியின் 17.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ரகுவன்ஷி வாழ்வில் முக்கிய மனிதர்

இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பதிவு செய்தது. கொல்கத்தா அணியின் இளம் வீரரான அங்கிரிஷ் ரகுவன்ஷி தனது வெற்றிக்கு பின்னர் இருக்கிற முக்கியமான மனிதர் அபிஷேக் நாயர் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த அரை சதத்தை அபிஷேக் நாயர் மற்றும் கொல்கத்தா அணி வீரர்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறியிருக்கிறார். இது குறித்த அவர் கூறும் பொழுது “எனது அரை சதத்தினை எனது பயிற்சியாளர் அபிஷேக் நாயர், எனது அணியினர் மற்றும் துணை ஊழியர்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

- Advertisement -

அவர்களுடன் தங்கி இருந்து களத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அபிஷேக் நாயர் என் குழந்தை பருவத்தில் இருந்தே என்னுடன் இருக்கிறார். இந்த ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் அனைத்து ஷாட்களும் விளையாட அவர்தான் எனக்கு பயிற்சி அளித்தார். எனவே எனது வாழ்வில் முக்கிய மனிதர் அவர் மட்டுமே. எனது இறுதி இலக்கு என்னவென்று கேட்கிறீர்கள். வெளிப்படையாக கூற வேண்டும் என்றால் இந்திய ஜெர்சியை நான் அணிய வேண்டும்.

இதையும் படிங்க: ஆண்ட்ரே ரசல் இப்படி பேட்டிங் பண்ண.. அந்த 18 வயது இந்திய வீரர் தான் காரணம்- ரிக்கி பாண்டிங் பேட்டி

ஆனால் இதுவரை யாரும் செய்யாதது போல் நான் அணிய வேண்டும். அனைவரும் என்னை பார்த்து நான் வித்தியாசமானவன் என்று கூற வேண்டும்” என்று கூறியிருக்கிறார். 18 வயதை ஆன இந்த இளம் வீரர் இந்திய அணியில் விளையாடுவதே தனது ஒரே இலக்கு என்று கூறி இருக்கிறார்.