ஆண்ட்ரே ரசல் இப்படி பேட்டிங் பண்ண.. அந்த 18 வயது இந்திய வீரர் தான் காரணம்- ரிக்கி பாண்டிங் பேட்டி

0
654

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியதைத் தொடர்ந்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் தனது அணியை விமர்சித்தும் மற்றும் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் ரகுவரன்சியை பாராட்டியும் பேசியிருக்கிறார்.

டெல்லி அணியின் சொந்த மைதானமான விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய அந்த அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் அபாரமாக குவித்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் நரேன் 39 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் என 85 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

தனது அறிமுக போட்டியில் களமிறங்கி சிறப்பாக விளையாடிய அங்கிஷ் ரகுவன்ஷி 27 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 54 ரன்கள் விலாசி கொல்கத்தா அணிக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால் பின்னால் வந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் ரண்களை சுலபமாக குவிக்க வழி வகுத்தது. அதற்கு பின்னர் களமிறங்கிய ரசல் 19 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என விளாசி 41 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. பின்னர் 20 ஓவர்களில் 273 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சால் 17.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவு செய்தது.

எனவே இந்த தோல்வி குறித்துக் கூறிய டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கொல்கத்தா அணி வீரர் அன்கிரிஷ் ரகுவன்சியை பாராட்டி பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது “நம்பர் 3ல் களமிறங்கி விளையாடிய 18 வயது அங்கிஷ் ரகுவன்சி சிறப்பாக விளையாடினார் என்று நினைக்கிறேன். தொடக்கத்தில் அவரது சிறப்பான ரன் குவிப்பால் ஆன்ட்ரே ரசல் மற்றும் பின்னால் வரும் பேட்ஸ்மேன்கள் அவர்கள் எப்போதும் விளையாடும் விதத்திலேயே விளையாட வழிவகுத்து.

- Advertisement -

மேலும் அவர்களது கையில் விக்கெட்டுகள் இருந்தன. அதனால் அவர்கள் அவ்வாறான அதிரடியை தொடர்ந்து வெளிப்படுத்த முடியும். ஆனால் எங்களைப் பற்றி நாங்கள் உண்மையிலேயே விமர்சிக்க வேண்டும். அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும்” என்று பாண்டிங் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: சத்தத்தால சுனில் நரைன தப்பிக்க விட்டுட்டோம்.. நாங்க ஆல் அவுட் ஆனதே நல்லது – ரிஷப் பண்ட் பேட்டி

இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் அந்த வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.