கோலியுடன் சமாதானம்.. ஆனால் ஆர்சிபி போட்டியில் நடுவருடன் கம்பீர் சண்டை.. களத்தில் என்ன நடந்தது?

0
33
Gambhir

நேற்று ஐபிஎல் தொடரில் மொத்தம் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. மதியம் நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா அணி தனது சொந்த மைதானத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் மென்டர் கம்பீர் நான்காவது நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நேற்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு துவக்க விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இங்கிலாந்தின் பில் சால்ட் அதிரடியாக 14 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். பின்பு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆர்சிபி அணி ஆட்டத்துக்குள் வந்தது. பொறுமையாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

கொல்கத்தா அணி கொஞ்சம் சுமாராக விளையாடியதாகதெரிந்தாலும் கூட, அந்த அணி சாதாரணமாக 222 ரன்கள் நேற்று குவித்துவிட்டது. பிறகு இந்த இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு வில் ஜேக்ஸ், ரஜத் பட்டிதார் இருவரும் அதிரடியான அரை சதங்கள் அடித்து ஆர்சிபி அணியை வெற்றி பெறும் இடத்திற்கு கொண்டு வந்து வைத்தார்கள்.

இந்த நிலையில் திடீரென விக்கெட்டுகள் சரிந்து, 18 ஓவர்கள் முடிவில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் களத்தில் பேட்டிங்கில்தினேஷ் கார்த்திக் இருந்தார். 19ஆவது ஓவரை ரசல் வீச வந்தார். இதற்கு மேல் போட்டி பரபரப்பாக சென்று ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வென்றது.

இந்த 19ஆவது ஓவரின் ஆரம்பத்தில் சுனில் நரேன் களத்தை விட்டு வெளியேற, குர்பாஸ் பீல்டிங் செய்வதற்காக உள்ளே வந்தார். ஆனால் நான்காவது நடுவர் இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக கம்பீர் மற்றும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் இருவரும் நான்காவது நடுவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க: சாம் கரன் மாதிரி ஒரு ஆள நான் டீம்லயே வச்சுக்க மாட்டேன்.. காரணம் இதுதான் – சேவாக் விமர்சனம்

இறுதியாக நான்காவது நடுவர் சுனில் நரை எனக்கு மாற்றுவீரரை அனுமதிக்கவே இல்லை. கடைசியில் சுனில் நரைன் மீண்டும் பீல்டிங் செய்ய திரும்பினார். இந்தப் போட்டிக்கு முன்பாக கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் தங்கள் மொத்த சண்டைகளையும் மறந்து சமாதானமாகி, பயிற்சியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.