எல்லா பவுலர்களும் எனக்கு பிளான் வச்சிருக்காங்க.. அந்த பையன் ஓவர் கேட்டு வாங்கினான் – ரசல் பேட்டி

0
519
Russell

இன்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டி மிகவும் பரபரப்பானதாக அமைந்தது. கடைசி ஓவரின் கடைசி பந்து வரை சென்ற இந்த போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை ஹைதராபாத் அணி தேர்ந்தெடுக்க, கொல்கத்தா அணி தனது முதல் நான்கு விக்கெட்டுகளை மிக வேகமாக இழந்து விட்டது. ஆறாவது இடத்தில் வந்த ரமன் தீப் சிங் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்குப் பிறகு ரிங்கு சிங் மற்றும் ரசல் இருவரும் சேர்ந்து 81 ரன்கள் அதிரடியாக பாட்னர்ஷிப் அமைத்தார்கள். மேலும் கடைசி ஐந்து ஓவரில் 85 ரன் குவித்தார்கள். ரசல் 25 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.

இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு கடைசி ஐந்து ஓவர்களில் 80 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அதிரடியாக விளையாடிய ஹென்றி கிளாசன் கடைசி ஓவருக்கு 13 ரன்கள் என்கின்ற நிலைக்கு ஆட்டத்தை கொண்டு வந்தார். கடைசி ஓவரை வீசிய ஹர்சித் ராணா அபாரமாக செயல்பட்டு எட்டு ரன்கள் மட்டுமே விட்டு தந்து நான்கு ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார்.

எல்லாரும் பிளான் வச்சிருக்காங்க

இந்த போட்டியில் 64 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்ற ரசல் பேசும் பொழுது “நான் இந்த போட்டியில் பந்தை சிறப்பாக அடிப்பதாக உணர்ந்தேன். எனக்கு வருகின்ற பந்துகளுக்கு ஏற்றவாறு எதிர்வினை செய்ய நினைத்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக பந்துவீச்சாளர்கள் எனக்கு எதிராக திட்டங்களை வைத்திருக்கிறார்கள். எனவே நான் ரன்களை கடினப்பட்டுதான் எடுத்து வருகிறேன். எல்லோரும் எனக்காக ஒரு திட்டத்தை வைத்திருப்பதை நான் அறிவேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 8 சிக்ஸர்களை நொறுக்கிய கிளாசன்.. 5 பந்தில் 7 ரன்கள்.. ஹீரோவான கேகேஆர் ஹர்ஷித் ராணா

இந்த அணி நிர்வாகம் எனக்கு நிறைய செய்திருக்கிறது. இந்த ஜெர்சியை நான் அணிவதற்கு என் அணி நிர்வாகத்திற்கு ஏதாவது அர்த்தம் சேர்க்க வேண்டும் என்று இந்த போட்டியில் நினைத்தேன். தொடர்ந்து இதே வழியில் என்னால் செயல்பட முடியும் என்று நம்புகிறேன். ஹர்ஷித் ராணா கேரக்டர் எப்படி என்பதை அவரது செயல்பாடு காட்டுகிறது. கடைசி ஓவர் வேண்டுமென்று அவர் என்னிடம் கேட்டார். மேலும் அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் சென்ற பொழுதும் அவர் வலிமையாக திரும்பி வந்து வெற்றி பெற்றார்” என்று கூறியிருக்கிறார்.