இது அவங்க இடம்.. செய்ய வேண்டியத செஞ்சிட்டாங்க.. இந்த தப்பால தோத்தோம் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
1471
Shreyas

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று தோல்வியடையாத இருந்தது. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் அந்த அணியின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் 34 மற்றும் சுனில் நரைன் 27 ரன்கள் எடுத்தார்கள். ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். ஆடுகளம் மெதுவாக இருந்ததால் பேட்டிங் செய்ய சிரமமாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருத்ராட்சையை இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 58 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி ஐந்தாவது போட்டியில் விளையாடி மூன்றாவது வெற்றியை பெற்றது.

இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்தது. ஆனால் மீதி 14 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து மொத்தம் 81 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணி ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று உணராமல் விளையாடியது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

இன்றைய போட்டியில் தோல்விக்கு பின் பேசிய கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் “ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று மதிப்பிடுவதில் நாங்கள் தோல்வி அடைந்தோம். பவர் பிளேவில் நாங்கள் நல்ல முறையில் விளையாடிய அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். ஆறு ஓவர்களுக்கு பிறகு ஆடுகளம் அப்படியே மாறியது. இங்கு ரன்களை எடுப்பது எளிதான விஷயமாக இல்லை. சிஎஸ்கே அணிக்கு இங்குள்ள நிலைமைகள் நன்றாக தெரியும் எனவே அவர்கள் அதற்கு தகுந்தவாறு பந்து வீசினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி பாய் ஆரம்பத்துல கூட இருந்தது ஞாபகம் வருது.. இன்னைக்கு நான் இவங்கள சிரமப்படுத்த விரும்பல – ருதுராஜ் பேட்டி

இங்கு முதல் பந்தில் இருந்து அடிக்க முடியாது. நாங்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சி செய்தோம் ஆனால் முடியவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்ததால் பேட்டிங்கில் வேகமாக செல்ல முடியவில்லை. இங்கு கிடைத்ததில் இருந்து நாங்கள் பாடத்தை எடுத்துக் கொள்வோம். மேலும் தொடரின் ஆரம்பத்தில் இப்படி ஒரு தோல்வி வந்தது நல்ல விஷயம். நாங்கள் மீண்டும் பழகிய எங்கள் சொந்த மைதானத்திற்கு திரும்பும் பொழுது நிலைமைகளை சரியாக புரிந்து விளையாடி வெற்றி பெறுவோம்” என்று கூறியிருக்கிறார்.