தோனி பாய் ஆரம்பத்துல கூட இருந்தது ஞாபகம் வருது.. இன்னைக்கு நான் இவங்கள சிரமப்படுத்த விரும்பல – ருதுராஜ் பேட்டி

0
1150
Ruturaj

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், சிஎஸ்கே அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. சிஎஸ்கே அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய கேப்டன் ருதுராஜ் முதல் அரைசதம் அடித்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று சிஎஸ்கே அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. கேகேஆர் அணிக்கு பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் வந்தது. இதற்குப் பிறகு பதவிக்கு வந்த ரவீந்திர ஜடேஜா அந்த அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி சிஎஸ்கே அணியின் பக்கம் ஆட்டத்தை திருப்பினார்.

- Advertisement -

கேகேஆர் அணிக்கு அதிகபட்சமாக 32 பந்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார். துவக்க ஆட்டக்காரர் சுனில் நரைன் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரவீந்திர ஜடேஜா நான்கு ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்தரா 15, டேரில் மிட்சல் 25, சிவம் துபே 28 ரன்கள் எடுத்தார்கள். வெற்றி பெற மூன்று ரன்கள் தேவையாக இருக்கும் பொழுது தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். அவர் ஆட்டம் இழக்காமல் 1 ரன் எடுக்க, இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய அரைசதம் அடித்த ருதுராஜ் ஆட்டம் இழக்காமல் 58 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றிக்கு பின் பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் “எனக்கு கொஞ்சம் பழைய ஞாபகம் வருகிறது. என்னுடைய முதல் அரை சதத்தின் போது போட்டியை முடிக்கும் பொழுது தோனி பாய் கூட இருந்தார். இன்றையபோட்டியில் ரகானே காயம் அடைந்ததால், பேட்டிங் மீதான பொறுப்பு என் மீது இருந்தது. நான் அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் தர விரும்பவில்லை. இது 150 முதல் 160 ரன்கள் எடுப்பதற்கான விக்கெட். பவர் ப்ளே முடிந்து எப்பொழுதும் ஜடேஜா சிறப்பாக பந்துவீச்சில் வருவார்.

- Advertisement -

இதையும் படிங்க : 17.4 ஓவர்.. தோக்காத கேகேஆர்-க்கு சேப்பாக்கத்தில் முற்றுப்புள்ளி.. சேசிங்கில் தோனி சாதனை.. சிஎஸ்கே அபார வெற்றி

இந்த அணியை பொறுத்தவரையில் நான் யாருக்கும் எதுவும் சொல்லத் தேவையில்லை. எல்லோருக்கும் அவரவர் செய்யும் வேலை தெரியும். மேலும் என்னைச் சுற்றி தோனி பாய் மற்றும் பிளமிங் ஆகியோர் இருக்கிறார்கள். என்னுடைய பேட்டிங் மெதுவான ஆரம்பம் என்று சொல்ல மாட்டேன். டி20 கிரிக்கெட்டில் சில நேரம் அடிக்கவும் செய்வோம் சில நேரம் அதற்கு அதிர்ஷ்டமும் தேவை. கிரிக்கெட் வல்லுனர்கள் தற்போது என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி ஏதாவது பேசலாம்” என்று கூறி இருக்கிறார்