ஐபிஎல் தொடரின் இன்றைய டபுள் ஹெட்டரில் இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதின . இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஏ சிதம்பரம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது ..
டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது . துவக்கத்திலேயே அதிரடியாக துவங்கினாலும் வருண் சக்கரவர்த்தியின் சிறப்பான பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் ருத்ராஜ் . இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு சரிவு ஏற்பட்டது .
ஆட்டத்தின் ஏழாவது ஓவரின் இறுதிப் பந்தில் ரகானே 16 ரண்களில் ஆட்டம் இழந்தார். ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரின் மூன்றாவது பந்தில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டெவான் கான்வே 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சார்ந்து தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் .
இதனைத் தொடர்ந்து பதினொன்றாவது ஓவரில் அம்பட்டி ராயுடு மற்றும் மொயின் அலி ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு சரிவை கொடுத்தார் சுனில் நரேன் . இதனைத் தொடர்ந்து ஆறாவது விக்கெட் இருக்கு ஜோடி சேர்ந்த சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அணியை சரிபிலிருந்து மீட்க போராடினாலும் வேகமாக கண்களை குறிக்க முடியவில்லை . 24 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா இறுதி ஓவரில் ஆட்டம் இழந்தார் . அதிரடியாக விளையாடிய சிவம் துபே 34 பந்துகளில் 48 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார் . எம் எஸ் தோனி இரண்டு ரங்களுடன் கழுத்தில் இருந்தார் . நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 144 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்தது .
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது . அந்த அணியின் துவக்க வீரர் குர்பாஸ் ஒரு இரண்டிலும் ஜேசன் ராய் 12 ரன்களிலும் ஆட்டம் இழக்க இவர்களைத் தொடர்ந்து ஆட வந்த வெங்கடேஷ் ஐயர் 9 ரன்களில் வெளியேறினார் . இதனால் ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 33 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது .
இவர்களைத் தொடர்ந்து ஆட வந்த கொல்கத்தா அணியின் நம்பிக்கை நாயகன் ரிங்கு சிங் மற்றும் கேப்டன் நித்திஷ் ராணா இருவரும் சிறப்பாக விளையாடினர் . போட்டியின் சூழ்நிலை உணர்ந்து மெதுவாகவும் அதே நேரம் ரன் ரேட் உயரும்போது அதிரடியாகவும் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர் . இரண்டு வீரர்களுமே தங்களது அரை சதத்தை பூர்த்தி செய்தனர் . இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் இரண்டு வீரர்களும் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது .
வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரிங்கு சிங் மூன்று சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 42 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . இதனைத் தொடர்ந்து நித்திஷ்ரானா உடன் இணைந்தார் ரசல் . கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் சென்னை அணியின் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . நித்திஷ்ரானா 44 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 57 ரன்களில் ஆட்டம் விளக்காமல் இருந்தார் . ரசல் இரண்டு ரன்கள் உடன் களத்தில் இருந்தார் . இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கே அணி மீதி இருக்கும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறது