கீரோன் பொல்லார்ட் கூறிய டாப் 5 டி20 கிரிக்கெட் வீரர்கள் ; பட்டியலில் ரோஹித் மற்றும் பும்ராவுக்கு இடமில்லை, அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்

0
946
Kieron Pollard

உலக அளவில் எங்கு டி20 தொடர் நடந்தாலும் அந்த தொடரில் ஏதேனும் ஒரு அணியில் கீரோன் பொல்லார்ட்டின் பெயர் இடம் பெற்றிருக்கும். தனது இரக்கமற்ற பேட்டிங் மற்றும் பந்து வீச்சின் மூலமாக இந்த குறிப்பிட்ட பார்மெட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆல்ரவுண்டர் வீரராக தன்னை தானே அவர் செதுக்கி கொண்டுள்ளார். டி20 போட்டி பொறுத்தவரையில் அவர் மொத்தமாக 567 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்

502 இன்னிங்ஸில் தனது பேட்டிங் மூலமாக 56 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட, மொத்தம் 11,123 ரன்களை 152.69 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் இவர் குவித்துள்ளார். டி20 போட்டிகளில் இவரது பேட்டிங் ஆவெரேஜ் 31.61 ஆகும். 708 பவுண்டரிகளையும் 758 சிக்சர்களையும் இந்த பார்மெட்டில் இவர் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தனது பந்து வீச்சில் மூலமாக 300 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார்.

- Advertisement -

தனக்கு பிடித்த டாப் 5 டி20 கிரிக்கெட் வீரர்களை பட்டியலிட்ட பொல்லார்ட்

இவ்வளவு பெரிய நம்பர்களை தனது பெயருக்கு பின்னால் வைத்திருக்கும் கீரோன் பொல்லார்ட், தனக்கு பிடித்த டாப்-5 டி20 கிரிக்கெட் வீரர்களை தற்போது வரிசைபடுத்தி கூறியிருக்கிறார். அந்த வரிசையில் சக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறாதது மிக ஆச்சரியமாக உள்ளது. அதேபோல விராட் கோலி பெயரும் அந்த பட்டியலில் இடம்பெறாதது குறித்து தற்பொழுது, அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

டி20 போட்டிகளை பொருத்தவரையில் 5 சிறந்த கிரிக்கெட் வீரர்களாக கீரோன் பொல்லார்ட் பட்டியலிட்ட அந்த டாப் 5 வீரர்கள் கிறிஸ் கெயில், மகேந்திரசிங் தோனி, லசித் மலிங்கா சுனில் நரைன் மற்றும் கீரோன் பொல்லார்ட் ஆவர். இந்தப் பட்டியலில் தன்னுடைய பெயரையும் அவர் இணைத்துள்ளார். டி20 போட்டிகளில் பொருத்தவரையில் என்னுடைய சாதனைகளை இதற்கான பதிலைக் கூறி விடும். எனவே இதில் என்னுடைய பெயரையும் இணைத்து உள்ளேன் என்றும் விளக்கமளித்தார்.

கிறிஸ் கெயில்

டி20 கிரிக்கெட் போட்டிகளின் கடவுளாக போற்றப்படும் இவர் 448 போட்டிகளில் விளையாடி 87 அரை சதங்கள் மற்றும் 22 சதங்கள் உட்பட மொத்தமாக 14,276 ரன்களை குவித்துள்ளார். இந்தப் டி20 பார்மெட்டில் 1105 பவுண்டரிகளையும், 1042 சிக்ஸர்களையும் கிறிஸ் கெயில் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டி20 கிரிக்கெட் போட்டிகளில் இவருடைய பேட்டிங் அவரேஜ் 36.79 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 145.71 ஆகும். பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அவ்வப்போது சிறப்பாக செயல்பட்டு 82 விக்கட்டுகளையும் கிறிஸ் கெயில் கைப்பற்றியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி

கேப்டன் கூலான மகேந்திர சிங் தோனி டி20 போட்டிகளில் பொறுத்தவரையில் 344 போட்டிகளில் விளையாடி 27 அரை சதங்கள் உட்பட 6905 ரன்களை 134.33 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார். டி20 போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 38.36 ஆகும். 474 பவுண்டரிகளையும், 304 சிக்சர்களையும் தோனி விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் மகேந்திர சிங் தோனி மிகப்பெரிய நம்பருக்கு சொந்தக்காரர் ஆவார். தன்னுடைய மின்னல் வேக ஸ்டம்பிங் மூலமாக 84 ஸ்டம்பிங்கும், 196 கேட்சுகளையும் தோனி பிடித்துள்ளார்.

சுனில் நரைன்

இந்திய ரசிகர்களுக்கு இவரது ஆல்ரவுண்டிங் திறமையை குறித்த தொடக்கம் தேவை இல்லை. தன்னுடைய மாயாஜால பந்துவீச்சின் மூலமாகுவும், அதிரடியான பேட்டிங் மூலமாகவும் அனைவரையும் ஈர்ப்பதில் இவர் கைதேர்ந்தவர். 379 டி20 போட்டிகளில் விளையாடி 419 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். டி20 போட்டிகளில் இவருடைய பௌலிங் எக்கானமி 6.04 மற்றும் ஆவரேஜ் 20.77 மட்டுமே ஆகும்.

தனது அதிரடியான பேட்டிங் மூலமாக 9 அரை சதங்கள் உட்பட 2739 ரன்களையும் இவர் குவித்துள்ளார். டி20 போட்டிகளில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 144.46 ஆகும். இந்த பார்மெட்டில் 160 சிக்சர்களையும், 266 பவுண்டரிகளையும் சுனில் நரைன் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லசித் மலிங்கா

யார்க்கர் பந்துகளை எப்படி போட வேண்டும் என்று இவரது வீடியோக்களை பார்த்தால் நாமும் கற்றுக் கொள்ளலாம். அந்த அளவுக்கு தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளை எறிவதில் லசித் மலிங்கா பெயர் போனவர். 295 டி20 போட்டிகளில் விளையாடி 390 விக்கெட்டுகளை லசித் மலிங்கா கைப்பற்றி இருக்கிறார். டி20 போட்டிகளில் இவருடைய பவுலிங் எக்கானமி 7.07 மற்றும் பௌலிங் ஆவெரேஜ் 19.68 மட்டுமே ஆகும்.

சர்வதேச டி20 போட்டிகளில் 107 விக்கெட்டுகளை 84 போட்டிகளில் கைப்பற்றி தற்போது வரை நம்பர் ஒன் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.