இந்திய ரசிகர்களை சீண்டிய இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்

0
457
Kevin Pietersen
(Photo by Stu Forster/Getty Images)

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. கடந்து நான்கு ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வியாகும் . இந்தியாவின் படுதோல்விக்கு பின் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய ரசிகர்களை கேலி செய்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் போட்டி முடிந்ததும் இந்திய அணியின் தோல்வியை கேலி செய்யும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை அவர் இந்தியில் வெளியிட்டுள்ளார்.அதில் “ஆஸ்திரேலியாவை அந்த நாட்டில் தோற்கடித்தபோது நிறைய கொண்டாட வேண்டாம் என நான் எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா இந்தியா” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை அவர் இந்தியில் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்க்கு 39 ரன்களுடன் ஐந்தாம் நாளை தொடங்கியது. முதல் ஒரு மணி நேரம் ஆட்டம் இந்தியாவின் பக்கம் சென்றது இருந்தாலும் பாகுபலியில் பிரபாஸ் கயிறை இழுப்பது போல ஜேம்ஸ் ஆண்டர்சன் வெற்றியை இந்தியாவிடும் இருந்து இங்கிலாந்துக்கு இழுத்து விட்டார். அவர் வீசிய ஒரே ஓவரில் சுப்மான் கில் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோரை வெளியேற்றினார் . பின்னர் அதே ஸ்பெல்லில் ரிஷாப் பந்தின் விக்கெட்டையும் தூக்கினார்.

- Advertisement -


மதிய உணவுக்குப் பிறகு, இங்கிலாந்து இன்னிங்ஸை 5G வேகத்தில் முடிக்க , முதலாவது டெஸ்ட் போட்டியை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது டெஸ்ட் பிப்ரவரி 13 முதல் அதே இடத்தில் நடைபெறும். மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. மூன்றாவது டெஸ்ட் பிங்க் பந்துடன் பகல்-இரவு ஆட்டமாக விளையாடப்படும்.