ப்ளீஸ் ஜடேஜாவை தனியா விட்டுருங்க.. அவர பத்தி பேச எதுவும் இல்லை – கெவின் பீட்டர்சன் விமர்சனம்

0
139
Jadeja

சிஎஸ்கே அணி நிர்வாகம் கடந்த இரண்டு போட்டிகளாக லக்னோ அணிக்கு எதிராக பேட்டிங்கில் நான்காவது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவை களம் இறக்கி வருகிறது. தற்போது இது குறித்து நிறைய விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன. இதற்கு கெவின் பீட்டர்சன் ஜடேஜாவுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார்.

சிஎஸ்கே இரண்டு போட்டிகளாக தொடர்ந்து லக்னோ அணிக்கு எதிராக விளையாடியது. இதில் முதல் போட்டியில் பேட்டிகள் நான்காவது இடத்தில் வந்த ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்தார். அதே சமயத்தில் பந்து வீச்சில் விக்கெட்டுகள் எதுவும் அவரால் கைப்பற்ற முடியவில்லை.

- Advertisement -

இதேபோல் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் 19 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதேபோல் பந்து வீச்சிலும் அவரால் பெரிய தாக்கத்தை எதுவும் ஏற்படுத்த முடியவில்லை.

இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் அடுத்த அடுத்த தோல்விகளுக்கு ரவீந்திர ஜடேஜா மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது. ஆனால் ரவீந்திர ஜடேஜா பல போட்டிகளில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கிறார். மேலும் வெளியில் பலரால் புகழப்படாத மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறார்.

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் பேசும் பொழுது “தயவுசெய்து ஜடேஜாவை தனியாக விட்டு விடுங்கள். நீங்கள் செய்வது என்னவென்றால் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்க்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். நேற்று இரவு சிஎஸ்கே எல்லாவற்றையுமே சரியாக செய்தது. ஆனால் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் அவர்களை தனி ஒரு வீரராக தோற்கடித்தார். ஐபிஎல் தொடரில் சிறந்த சதங்களில் ஒன்றை அடித்திருக்கிறார். எனவே ரவீந்திர ஜடேஜாவை நோக்கி விரலை நீட்டுவதை விட்டுவிடுங்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : சேவாக்கின் டி20 உ.கோ இந்திய ஸ்பெஷல் பிளேயிங் XI.. அதிரடியாக ஹர்திக் பாண்டியா வெளியே

ரவீந்திர ஜடேஜா முழுமையாக ஒரு நட்சத்திர வீரர். இந்திய அணிக்காக முதல் தேர்வில் அவருடைய பெயர் வரும். அந்தப் பையனை தயவுசெய்து விட்டு விடுங்கள். நேற்று ஸ்டோய்னிஸ் மஞ்சள் ஆர்மியை தனி வீரராக வென்றுவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.