இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் எதிர்காலத்தில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா சிறந்த இன்னிங்ஸ்கள் விளையாடுவதை பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 53 பந்துகளில் அதிரடியாக 135 ரன்கள் குவித்தார். மேலும் இதில் 13 பிரம்மாண்ட சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடக்கம். அவருடைய அதிரடி தங்கு தடை இல்லாமலும் புத்திசாலித்தனமாகவும் இருந்தது.
அபிஷேக் ஷர்மாவின் மெச்சூரிட்டி
நேற்று அபிஷேக் ஷர்மா விளையாடிய விதம் வெறும் அதிரடியாக மட்டும் இல்லாமல், எந்த பந்துகளை எப்படி விளையாட வேண்டும் என்று சரியாக அமைந்திருந்தது. மேலும் அவர் கடைசி நேரத்தில் ஆதில் ரஷீத் மற்றும் ஜேமி ஓவர்டன் இருவரையும் எதிர்பார்த்து தன்னுடைய இன்னிங்ஸ் வேகத்தை குறைத்து காத்திருந்தார்.
பொதுவாக அதிரடியாக விளையாடுவதற்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்ட வீரர்கள் எல்லா பந்துகளையும் அடிப்பதற்கு செல்வார்கள். ஆனால் அபிஷேக் ஷர்மா தன்னுடைய ஜோனில் இருக்கும் பந்துகளை மட்டுமே மிகச் சரியாக தண்டித்தார். மேலும் வேகத்தை குறைக்க வேண்டிய இடத்தில் குறைத்து சரியான பந்துவீச்சாளர்கள் கிடைக்கும் வரை காத்திருக்கவும் செய்தார். இந்த வகையில் அவருடைய பேட்டிங் மெச்சூரிட்டியாக அமைந்திருந்தது.
நான் பார்த்ததில் சிறந்தது
அபிஷேக் சர்மா பேட்டிங் குறித்து பேசி உள்ள கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது “இது என் வாழ்நாளில் நான் கண்டிராத மிகச் சிறந்த டி20 இன்னிங்ஸ். எதிர்காலத்தில் இதைவிட சிறந்த இன்னிங்ஸ் அபிஷேக்சர்மா விளையாடுவதை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். அவரால் அதைச் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”
இதையும் படிங்க : இந்திய அணிக்காக ஜவகல் ஸ்ரீநாத் செஞ்சது மோசமான தப்பு.. அவர விடக்கூடாது – ஐசிசி கிறிஸ் பிராட் பேச்சு
“அபிஷேக் ஷர்மா மும்பையில் யாராலும் தடுக்க முடியாதவர் ஆக இருந்தார். மேலும் அவர் அடித்த சில சிக்ஸர்கள் ஸ்டாண்டில் வெகு தூரம் சென்று விழுந்தது. அவர் விளையாடிக் கொண்டிருந்த பொழுது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மழை பொழிந்து கொண்டு இருந்தது. மிகச் சிறந்த இளம் வீரராக அவர் வெளிப்பட்டு இருக்கிறார்” என்று பாராட்டி பேசி இருக்கிறார்.