இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டியில் நான்காவது நடுவராக இருந்த ஜவஹர் ஸ்ரீநாத் மூளை அதிர்ச்சி ஏற்பட்ட சிவம் துபே இடத்தில் ஹர்ஷித் ராணாவை ஆட அனுமதித்தது மோசமான போக்கு என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நான்காவது நடுவராக பணியாற்றி இருக்கும் கிறிஸ் பிராட் கூறியிருக்கிறார்.
தற்போது இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் மிகவும் சூடு பிடித்திருக்கிறது. இந்திய தரப்பில் இருந்து எந்த ஒரு வீரர்களும் இந்த விஷயத்திற்கு ஆதரவாக பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ஜவகல் ஸ்ரீநாத் செய்துள்ள இந்த விஷயத்தை எதிர்த்துதான் அனைவருமே பேசி இருக்கிறார்கள்.
அஸ்வின் தெரிவித்துள்ள எதிர்ப்பு
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து பேசி இருந்த பொழுது அணி நிர்வாகம் எந்த வீரர்களை வேண்டுமானாலும் விளையாட வைப்பதற்காக கேட்பார்கள், ஆனால் நான்காவது நடுவர்தான் சரியான வீரர் யார் என்பதை பார்த்து விளையாட வைக்க வேண்டும். எனக்கு இதை பார்க்க மிகவும் அதிர்ச்சியாக இருந்தது இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் தந்தையும், ஐசிசி நான்காவது நடுவராக பணியாற்றி இருக்கும் கிறிஸ் பிராட் இது குறித்து கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். தனது மகன் 2023 ஆம் ஆண்டு ஆசஸ் தொடரில் டேவிட் வார்னரை தொடர்ந்து ஒரே முறையில் வீழ்த்திய பொழுது, அதற்காக மீம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்காக ஐசிசி கிறிஸ் பிராடை எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் நடுவர்கள் இப்படியான தனிப்பட்ட ஆதரவை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
இது தடுக்கப்பட வேண்டியது
இதுகுறித்து பதிவு செய்திருக்கும் கிறிஸ் பிராட் கூறும் பொழுது “இது போன்ற தவறான விஷயங்களை தவிர்ப்பதற்காகத்தான் இண்டிபெண்டன்ட் ஐசிசி அதிகாரிகள் கொண்டுவரப்பட்டார்கள். இப்படி இருக்கும் பொழுது மீண்டும் ஏன் ஐசிசி ஒரு பக்கமாக சார்பெடுக்கவும் ஊழலின் மோசமான பழைய நாட்களுக்கு திரும்ப வேண்டும்?”
இதையும் படிங்க : அபிஷேக் செஞ்ச இந்த ஒரு விஷயத்தை.. வேற யார்கிட்டயும் நான் பாக்கல.. அவருக்கு இதை செய்வேன் – கம்பீர் பேட்டி
“ஒரு இந்திய நான்காவது நடுவர், மூளை அதிர்ச்சி ஏற்பட்ட வீரருக்கு தவறான வீரரை அனுமதித்த ஒரு விவகாரத்தில் இருந்து எப்படி தப்பித்துக் கொள்ள முடிகிறது? இப்படியான போட்டி அதிகாரிகள் ஒரு பக்கமாக சார்பான முடிவுகளை எடுக்கக் கூடாது. அவர்கள் நேர்மையாக சுதந்திரமான முறையில் முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






