9 போட்டி 52 ரன்.. பெரிய பெரிய மேட்ச்சில் மேக்ஸ்வெல் பண்ணத ஏத்துக்கவே முடியாது – கெவின் பீட்டர்சன் விமர்சனம்

0
232
Maxwell

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் பேட்டிங் செயல்பாடு மிக மிக மோசமாக இருந்து வருகிறது. இன்று ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் கோல்டன் டக் ஆனார். இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் விமர்சனம் செய்திருக்கிறார்.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி உடன் மோதி மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி 14.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதற்கு அடுத்து 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் வெளியே விடாமல் 11 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக அவர் மொத்தம் ஒன்பது போட்டிகளில் விளையாடி வெறும் 52 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இவருடைய ரன் ஆவரேஜ் 6.5 எனும் மோசமாக இருக்கிறது. அதிகபட்சமாக ஒரு போட்டியில் 28 ரன்கள் எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் நம்ப முடியாத அளவுக்கு 123 என கீழே இருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தங்கள் நாட்டிற்காக விளையாடுவதற்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு எதிராக கடந்த போட்டியிலும், இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியிலும் அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இன்றைய போட்டியில் மிக முக்கியமான நேரத்தில் கேமரூன் கிரீன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்ததும் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்ய வந்தார். நெருக்கடியான நிலையில் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு நேராக தூக்கி அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து கோல்டன் டக் ஆனார். இன்று ஆர்சிபி அணி தோல்வி அடைந்தால் இவர் பேட்டிங்கில் கோல்டன் டக் ஆனது மிக முக்கிய காரணமாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்சிபிக்கு ஆதரவாக அம்பயர்.. கண் முன் நடந்த ஏமாற்றம்.. சங்கக்கரா கொதிப்பு.. ரசிகர்கள் கோபம்

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது ” இவ்வளவு பெரிய முக்கியமான ஆட்டத்தில் மேக்ஸ்வெல்லிடம் இருந்து என்ன கிடைத்தது. இன்று பெரிய மேட்ச்சில் பெரிய வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். உங்களுக்கு நீங்களே ஒரு வாய்ப்பு கொடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மேக்ஸ்வெல் தேவையான அளவுக்கு விளையாடாமல் ஏமாற்றி விட்டார்” என்று கூறி இருக்கிறார்.