இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 50 ஓவர் உலக கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். இந்திய அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் ஸ்ரீசாந்த், ஐபிஎல் தொடரில் ஸ்பாட் ஃபிக்ஸ்சிங்கில் ஈடுபட்டதாக கூறி வாழ்நாள் தடை பெற்றார்.
அதன் பிறகு தமக்கும் இந்த வழக்கில் தொடர்பு இல்லை என உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி ஸ்பாட் பிச்சிங் புகாரிலிருந்து ஸ்ரீசாந்த் வெளியே வந்தார். இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விளக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சூழலில் ஸ்ரீசாந்த், இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக பல முயற்சிகளை செய்தார்.
3 ஆண்டு தடை:
இதற்காக கேரள அணிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஸ்ரீசாந்துக்கு மீண்டும் காயம் ஏற்பட்டதால் அவரால் போட்டியில் திரும்ப முடியவில்லை. இதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஸ்ரீசாந்த் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் ஸ்ரீ சாந்த் மூன்று ஆண்டுகளுக்கு கேரள கிரிக்கெட் சங்கம் தடை விதித்து இருக்கிறது.
இது தற்போது பரப்பரப்பை ஏற்படுத்திருக்கிறது. சாம்பியன் டிராபி தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை. இதற்கு காரணம் கேரள அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது தான் என்று கூறப்பட்டது. இதை கண்டித்து ஸ்ரீசாந்த் கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் கடுப்பான கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தற்போது ஸ்ரீசாந்த்க்கு மூன்று ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறார்கள்.
சாம்சன் தந்தைக்கும் சிக்கல்:
இந்த சூழலில் கேரள கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி20 லீக் தொடரில் கொள்ளம் கிரிக்கெட் அணியின் உரிமையாளராக ஸ்ரீசாந்த் இருக்கின்றார்.இதனை அடுத்து கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கொள்ளம் அணி, இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. இதனால் ஸ்ரீசாந்த் தனது அணியை விற்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புஜாரா வேணாம்.. அடுத்த கோலியான இந்த 23 வயசு புது பையன இங்கிலாந்து கூட்டிட்டு போங்க – ரவி சாஸ்திரி பேச்சு
இதேபோன்று சஞ்சு சாம்சன் தந்தை மீதும் மான நஷ்ட வழக்கு தொடர கேரள கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்திருக்கிறது. சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாததற்கு அவரின் தந்தையும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு இருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதனால் சஞ்சு சாம்சன் கேரள அணியில் இருந்து வெளியேறப் போவது உறுதியாகிவிட்டது.






