புஜாரா வேணாம்.. அடுத்த கோலியான இந்த 23 வயசு புது பையன இங்கிலாந்து கூட்டிட்டு போங்க – ரவி சாஸ்திரி பேச்சு

0
89
Pujara

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் 23 வயதான ஒரு புதிய இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் துவக்கமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கின்றன. இந்த டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக ஆரம்பிப்பது இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானதாக அமைகிறது.

- Advertisement -

இங்கிலாந்தில் புஜாரா

இந்திய அணி நிர்வாகம் தன்னை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு எடுத்துச் செல்ல விரும்பினால் அதற்கு தான் தயாராவேன் என புஜாரா கூறியிருக்கிறார். மேலும் அவர் கவுண்டி கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் மிகச் சிறப்பான முறையில் தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்தது. இந்த டெஸ்ட் தொடரின் போது கேஎல்.ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடவில்லை. அப்படி இருந்தபொழுதும் கூட இந்திய தேர்வுக்குழு புஜாரா மற்றும் ரகானேவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த பையன விட்றாதிங்க

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது ” நான் சாய் சுதர்சனை அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக பார்க்கிறேன். அவர் ஒரு கிளாஸ் பிளேயர் போல தெரிகிறார். அவர் மேல் எனக்கு எப்பொழுதும் ஒரு கண் இருக்கும். இங்கிலாந்தில் நமக்கு ஒரு இடது கை வீரர் தேவையாக இருக்கிறார்”

இதையும் படிங்க : மும்பை இப்ப கப் அடிக்கலனா இததான் செய்யணும்.. ஆனா அங்க பாகுபலி இருக்கார் விடமாட்டார் – ஹர்பஜன் சிங் பேச்சு

“மேலும் இங்கிலாந்து கண்டிஷனுக்கு அவருடைய நுட்பம் மற்றும் அனுபவம் நிச்சயம் உதவி செய்யும். ஏனென்றால் அவர் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வெளியில் இருந்து இந்திய அணியில் இடம் பிடிக்க கூடிய வாய்ப்பில் சாய் சுதர்சன் முன்னணியில் இருப்பார் என நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி சாய் சுதர்சன் 450 ரன்கள் மேல் எடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -