நான் பந்து வீசும் போது எம்எஸ் தோனி இதை மட்டும் செய்ய சொல்லி கேட்பார்.. சிஎஸ்கே வீரர் நூர் அகமது சுவாரஸ்யம்

0
100

இந்த வருடம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு சிறப்பாக இல்லாவிட்டாலும் ஒரு சில வீரர்களின் பங்களிப்பு அணிக்கு பெரிய நம்பிக்கையை அளித்தது.

அதில் முக்கிய சுழற் பந்துவீச்சாளரான நூர் அகமது கேப்டன் எம்எஸ் தோனி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் பத்து போட்டிகள் தோல்வியடைந்து நான்கு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐபிஎல் மெகா ஏலத்தில் சரியான வீரர்களை சென்னை அணி வாங்க தவறினாலும் நூர் அகமது போன்ற முக்கிய வீரர்களை வாங்கி அடுத்த வருடத்திற்கான அணியை சிறப்பாக கட்டமைத்தது.

இந்த வருடம் தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய நூர் அகமது 24 விக்கெட்டுகள் கைப்பற்றி ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளராக மாறினார். சென்னை அணியும் இவர் மீது 10 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில வருடங்களுக்கு நிரந்தர வீரராக மாறி இருக்கும் இவர், எம் எஸ் தோனி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

எந்த விஷயத்திற்கும் களத்தில் டென்ஷனாகாத தோனி அதே முறையிலேயே மற்ற வீரர்களையும் கையாளுவார் என்று கூறியிருக்கிறார். மேலும் தான் பந்து வீசும் போது நீங்கள் எது பலம் என்று நினைக்கிறீர்களோ அதற்கு தகுந்தவாறு பந்து வீசி உங்கள் திட்டத்தோடு எப்போதும் இருங்கள் என்று தோனி குறிப்பிடுவதாக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:சூர்யா கேப்டன் ஆனதிலிருந்தே இதில் சரியில்ல.. கடினமான முடிவு எடுத்தாகணும் – வாசிம் ஜாபர் கருத்து

இது குறித்து அவர் கூறும் போது “எம் எஸ் தோனி எப்போதுமே அனைத்து வீரர்களுக்கும் விஷயங்களை எளிமையாக வைத்திருக்கிறார். அதனால் நீங்கள் அதிகமாக யோசிக்க வேண்டியதில்லை. தோனி எப்போதுமே சூழ்நிலையை மதிப்பிட்டு அதற்குத் தேவையானவாறு செயல்படுங்கள் என்று எப்போதும் கூறுவார். நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதில் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது. எனவே எனக்கு எந்த விதமான அழுத்தமும் கிடையாது” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -