நான் வெட்கப்பட எதுவுமே இல்லை.. ஓபனா சொல்றேன்.. தோனி மட்டும் இல்லன்னா இது நிச்சயமா நடக்காது – சிஎஸ்கே கேப்டன் பேட்டி

0
52

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இதில் ஐந்து முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த நிலையில் இந்தத் தொடர் குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் சரியாக செயல்படாத காரணத்தால் 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்து 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதில் தொடரின் பாதியில் அணியின் கேப்டன் ருத்ராஜ் காயம் காரணமாக வெளியேற, அதற்குப் பின்னர் எம் எஸ் தோனி கேப்டனாக தலைமை தாங்கினார்.

அணியின் பிரச்சனையை உணர்ந்த தோனி, தேவையான மாற்றங்களை செய்து அடுத்த வருடத்திற்கான அணியை இந்த ஆண்டு பலப்படுத்தினார். இதில் குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரவீஸ் சிஎஸ்கேவின் சிறந்த தேர்வாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய உள்நாட்டுத் தொடரில் விளையாடி வரும் சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் சிஎஸ்கே அணி குறித்தும் தோனி குறித்தும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “எம் எஸ் தோனியை பொறுத்தவரை அவரின் ஆதரவு என்பது சிஎஸ்கே அணிக்கு எப்போதுமே இருக்கும். இதில் நான் வெட்கப்பட ஒன்றுமே கிடையாது, வெளிப்படையாக உங்கள் அனைவருக்குமே தெரியும். காயம் காரணமாக இந்த தொடரை நான் தவறவிட்டேன். அதற்குப் பிறகு மாத்ரெ, பிரவிஸ், உர்வில் பட்டேல் என சிறப்பான வீரர்கள் சென்னை அணியில் சேர அது அணியை பலப்படுத்தியது.

இதையும் படிங்க:குணத்தில் தங்கம் சார்.. தன் சிறுவயது பயிற்சியாளருக்கு பாண்டியா பிரதர்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்.. முழு விபரம்

அடுத்த ஆண்டு நான் மீண்டும் சென்னை அணியில் இணைவதன் மூலம் அது அணியை மேலும் பலமாக்கும். எனவே தோனி சொன்னது இதுதான் என்று நினைக்கிறேன்” என ருத்ராஜ் பேசியிருக்கிறார். எம் எஸ் தோனி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று தற்போது தகவல்கள் வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -