இந்திய கிரிக்கெட்

சாம்சன் நீங்க நினைக்கிறப்ப கேரளா டீம்ல ஆட முடியாது.. மரியாதையே இல்லையா – KCA தலைவர் விமர்சனம்

சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் கேரள கிரிக்கெட் சங்கம் கிடையாது என அதன் தலைவர் ஜெயேஸ் ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே டிராபியில் கேரளா அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை. அவரை கேரள கிரிக்கெட் சங்கம் தேர்வு செய்யவில்லை. இது மிகப்பெரிய சர்ச்சையாக தற்பொழுது மாறி இருக்கிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது? என்று தற்போது தெரிய வந்திருக்கிறது.

சசி தரூர் விமர்சனம்

கேரள கிரிக்கெட் சங்கம் ஈகோ காரணமாக சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்து விடக்கூடாது என எம்பி சசி தரூர் விமர்சனம் செய்திருந்தார். அவரை வேண்டுமென்றே கேரள கிரிக்கெட் சங்கம் விஜய் ஹசாரே தொடருக்கு கேரளா அணியில் தேர்வு செய்யவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இதன் காரணமாகவே சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டதாகவும், சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை என்றும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த இடத்தில் கேரள கிரிக்கெட் சங்கமும் அதன் தலைவரும் தவறு செய்து விட்டதாக பலரும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் நினைத்தால் நடக்காது

இதுகுறித்து கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஸ் ஜார்ஜ் கூறும்பொழுது “அவரை நாங்கள் விஜய் ஹசாரே தொடருக்கான கேரள அணியில் சேர்க்காத காரணம் 30 பேர் கொண்ட பயிற்சி முகாமுக்கு வர முடியாது என அவர் ஒற்றை வரியில் மெசேஜ் அனுப்பியதுதான். ஆனால் நாங்கள் அவரை தேர்வு செய்யாததால்தான் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யவில்லை என்பது கிடையாது. அவர் எங்களுக்கு சையத் முஸ்தாக் அலி தொடரில் கேப்டனாக இருந்தார். எனவே இந்த தொடரிலும் அவர் எங்கள் அணியை வழிநடத்துவார் என்று நாங்கள் நம்பினோம்”

இதையும் படிங்க : நியாயமான செலக்சன் நடக்கல.. அப்புறம் எதுக்கு உள்நாட்டு கிரிக்கெட் விளையாடனும் – ஹர்பஜன் சிங் விமர்சனம்

“இப்படி இருக்கும் பொழுது அவர் பயிற்சி முகாமுக்கு வரவில்லை. எனவே நாங்கள் முன்னோக்கி சென்று எங்களது அணியை அறிவித்தோம். பின்னர் அவர் செலெக்ஷனுக்கு தயாராக இருப்பதாக செய்தி அனுப்பினார். ஆனால் யாராக இருந்தாலும் கேரள கிரிக்கெட் குறித்து மதிக்கப்பட வேண்டிய கொள்கைகள் இருக்கிறது. இதே கேரளா அணிக்கு தேர்வு செய்யப்பட்டதால்தான் அவர் இந்திய அணிக்கு விளையாட சென்றார். அவர் விரும்பும்பொழுது வந்து கேரள அணியில் விளையாட முடியாது. இதற்கென்று சில கொள்கைகளும் விதிமுறைகளும் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by