நேற்று நடைபெற்ற முடிந்த இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் எட்டு போட்டிகளில் 779 ரன்கள் குவித்த கருண் நாயரை இந்திய அணிக்கு தேர்வு செய்யாதது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இருவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் சாம்பியன் டிராபி தொடர் என இரண்டுக்கும் இந்திய அணியை அறிவித்தார்கள். இதில் சில கலவையான விமர்சனங்கள் தற்போது செய்யப்பட்டு வருகிறது.
4 சுழல் பந்துவீச்சாளர்கள்
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி வியூகம் கடந்த 2024 டி20 உலகக் கோப்பை அணி தேர்வு செய்த வியூகம் போலவே இருக்கிறது. அதிலும் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை கூட்டிச் சென்று விளையாடினார்கள். ஆல் ரவுண்டர்களான அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருமே விளையாடும் அணியில் இடம் பெற்று இருந்தார்கள்.
தற்பொழுதும் இதேபோல நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதில் குல்தீப் யாதவ் மட்டுமே பிரதான சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார். அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் மூவருமே ஆல்ரவுண்டர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக சிராஜ் வரை நீக்கப்பட்டிருக்கிறார்.
கருண் நாயரை ஏன் தேர்வு செய்யவில்லை?
இந்த நிலையில் உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிய கருண் நாயரை ஏன் தேர்வு செய்ய முடியவில்லை என்று பேசி இருந்த அகர் கருத்த தெரிவிக்கும்போது “அவரது செயல்பாடு உண்மையில் அற்புதமாக இருந்தது. ஆனால் தற்போது அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் 40-க்கும் மேற்பட்ட ரன் ஆவரேஜ் வைத்திருக்கிறார்கள். எனவே இவர்களைத் தாண்டி புதியவர் ஒருவரை எடுப்பதற்கு சூழ்நிலை அமையவில்லை என்று கூறியிருந்தார்”
இதையும் படிங்க: சிராஜை விட ஹர்ஷித் ராணா பெரிய ஆளா?.. டிஎஸ்பி-யை நினைச்சா பாவமா இருக்கு – ஆகாஷ் சோப்ரா வருத்தம்
இது குறித்து விமர்சனம் செய்திருக்கும் ஹர்பஜன் சிங் பேசும்பொழுது “பார்ம் மற்றும் பர்பாமன்ஸ் அடிப்படையில் நீங்கள் வீரர்களை தேர்வு செய்யாத பொழுது, வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? கருண் நாயரை இந்த முறை இந்திய அணிக்கு தேர்வு செய்திருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






