இந்திய கிரிக்கெட்

யாரும் ரன் அடிக்காத மேட்ச்ல ரன் எடுத்தேன்.. அதை கண்டுக்காம என்னை தூக்கிட்டாங்க – கருண் நாயர் வருத்தம்

இந்திய டெஸ்ட் அணியில் தன்னை நீக்கியதை தான் எதிர்பார்க்கவில்லை என கருண் நாயர் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி கில் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணியில் இருந்து கருண் நாயர் நீக்கப்பட்டிருக்கிறார்.

நீக்கத்துக்கு காரணம் என்ன?

இந்திய டெஸ்ட் அணியில் மறு வாய்ப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடிய கருண் நாயர் கடைசி ஐந்தாவது போட்டியில் அரை சதம் அடித்திருந்தார்.

மற்றபடி அவரது ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக அமையவில்லை. அவருக்கு நல்ல துவக்கம் கிடைத்த போதும் அவருடைய பேட்டிங் டெக்னிக்கில் தவறு இருந்த காரணத்தினால் அவர் எப்போது வேண்டுமானாலும் விக்கெட்டை இழக்க கூடிய அபாயத்தை இருந்தார். இதன் காரணமாக அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் இவருடைய இடத்திற்கு தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

நான் எதிர்பார்க்கவில்லை

இது குறித்து கருண் நாயர் பேசும்போது “தேர்வுக் குழுவினர் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஒரு விஷயம் என்னவென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் யாரும் உடன் அடிக்காத பொழுது நான் அரை சதம் அடித்தேன். குறிப்பாக அந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் வென்று தொடரை சமன் செய்தோம். ஆனால் இந்த விஷயங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளப்படவில்லை”

இதையும் படிங்க : இலங்கை போட்டி.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. மாற்ற நெருக்கடியில் கம்பீர்.. தோற்காமல் பைனல் போகுமா இந்தியா?

“என்னால் பெரிதாக எதையும் சொல்ல முடியாது. என்னால் பெரிதாக எதையும் மாற்றவும் முடியாது. நான் தொடர்ந்து முன்னேற வேண்டும். அதாவது மற்றவர்கள் பார்வையில் இருந்து கிடையாது என்னுடைய பார்வையில் இருந்து நான் முன்னேற வேண்டும். அவர்கள் அவர்களுடைய முடிவை எடுத்து இருக்கிறார்கள். நான் தொடர்ந்து என்னுடைய வழியில் செல்ல வேண்டும். நான் தற்போது ரஞ்சி டிராபியில் விளையாட தயாராகிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by