தனக்கு இந்திய அணிகள் நீண்ட காலமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பொழுது ஒரு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தன்னை தொடர்பு கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுமாறு கூறியதாக கருண் நாயர் தெரிவித்திருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் கருண் நாயருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்து தனது திறமையை மீண்டும் அவர் நிரூபித்திருக்கிறார்.
ஓய்வு பெற சொன்னார்
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் விளையாடுவது உறுதி என தெரிகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கருண் நாயர் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருப்பதை குறிப்பிட்டு ஏற்கனவே பேசி இருந்தார். மேலும் அவர் இங்கிலாந்து லயன்ஸ் அனுப்பியதாக இரட்டை சதம் அடித்து உள்ளதால் நிச்சயம் முதல் போட்டியிலேயே வாய்ப்பு கிடைத்த விடும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கருண் நாயர் பேசும் பொழுது ” இந்திய அணியின் ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் என்னை தொடர்பு கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து என்னை ஓய்வு பெற சொன்னார். ஏனென்றால் வெளிநாட்டில் நடக்கும் லீக்குகளில் விளையாடுவதற்கு முடியும், மேலும் அதனால் எனக்கு பண பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் சொன்னார். நான் அப்போது இருந்த சூழ்நிலைக்கு இதை செய்வது எளிதாக இருந்திருக்கும். ஆனால் அவ்வளவு எளிதாக நான் விட்டுக் கொடுத்து இருந்தால் என்னை நானே திட்டிக் கொள்வேன் என்பதும் எனக்கு தெரியும்”
அது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது
“நான் இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்கின்ற எண்ணத்தை எப்பொழுதும் கைவிடவே இல்லை. நான் இரண்டு வருடத்திற்கு முன்பு இருந்த நிலையை எண்ணிப் பாருங்கள் என்னுடைய இந்த முடிவு மிகவும் பைத்தியக்காரத்தனமானதாக இருக்கும். ஆனால் இந்திய அணிக்கு விளையாடுவதற்கு எனக்கு தேவையான திறமைகள் இருப்பதை உணர்ந்திருந்தேன்”
இதையும் படிங்க : 256 ரன்.. காட்டடி அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. லீவிஸ் ருத்ர தாண்டவம்.. திருப்பி காட்டிய அயர்லாந்து.. முதல் டி20 முடிவு என்ன?
“தற்போது மீண்டும் இந்திய அணிக்கு விளையாட கிடைத்திருக்கும் வாய்ப்பை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக நான் பார்க்கிறேன். இந்த வாய்ப்பை மீண்டும் பெற முடிந்ததற்கு நான் நன்றி உள்ளவனாக இருக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பை நான் இரு கைகளாலும் எடுத்துக் கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்.






