இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் நிலையில் அடுத்ததாக ஓமன் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்திய அணியை கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய வெற்றி பெற்ற பின்னர், இரண்டு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வீரர்கள் இதற்கு தயாராக இருந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கை கொடுக்க மறுத்து போட்டி முடிந்த பின்னர், அப்படியே வெளியேறினார்.
இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பல முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் எதிர்வினை ஆற்றினார்கள். மேலும் இது குறித்து தங்களது விமர்சனங்களையும் பதிவு செய்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான கபில் தேவ், இது போன்ற தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பாகிஸ்தான் அணி கிரிக்கெட் விளையாடுவதில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இவை அனைத்துமே சிறிய விஷயங்கள். பாகிஸ்தான் அணி கிரிக்கெட் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் கைகுலுக்க விரும்பவில்லை என்றால் இரு தரப்பினரும் அதை பெரிய பிரச்சனையாக மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. மேலும் இது குறித்து தவறான அறிக்கைகளை வெளியிடுவதும் சரியான செயல் கிடையாது.
இதையும் படிங்க:இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பும் எண்ணமே இல்லையா? ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராகவும் ஸ்ரேயாஸ் தடுமாற்றம்.. விவரம்
பாகிஸ்தான் அணி தற்போது நல்ல கிரிக்கெட் விளையாட வில்லை. எனவே அதில் அவர்கள் பாடுபட்டு விளையாடி அதில் கவனம் செலுத்தி முன்னேறும் வழியை பார்க்க வேண்டும். அவர்கள் கைகுலுக்க விரும்புகிறார்களா அல்லது கட்டிப்பிடிக்க விரும்புகிறார்களா என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகவும் எனவே இதனை பெரிய பிரச்சனை ஆக மாற்றுவதற்கு எந்த அவசியமும் கிடையாது” என்று கூறி இருக்கிறார். இரு அணிகளும் இந்த சுற்றும் முடிந்து அடுத்ததாக சூப்பர் சுற்றில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.