இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ள இருக்கின்றன. இந்த நிலையில் விராட் கோலி உடன் ரோகித் சர்மாவை ஒப்பிட முடியாது என்றும் அவர் தனி சிறப்பு வாய்ந்த வீரர் எனவும் கபில்தேவ் பாராட்டி பேசியிருக்கிறார்.
இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய போட்டியில் ரோகித் சர்மா யாரும் எதிர்பார்க்காத வகையில் 41 பந்துகளில் 92 ரன்கள் குறித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் அவருடைய பேட்டிங் ஆஸ்திரேலியா அணியை அரை இறுதிக்கு வரவிடாமல் வெளியே அனுப்பி விட்டது.
இத்தோடு அவர் அணியை ஒரே அளவில் ஒருங்கிணைப்பு மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இளம் வீரர்கள் அவருடைய தலைமையில் மிகவும் வசதியாக உணர்கிறார்கள். அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அணிக்குள் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்திருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த அணியும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
மேலும் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடுவதை முதல்முறையாக தங்களுடைய பாணியாக வைத்திருக்கிறது. மேலும் துவக்க வீரராக வருவதால் ரோகித் சர்மாவே இதை முன் நின்று செய்யக் கூடியவராக இருக்கிறார். இதனால் உலக முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் அவருக்கு பெரிய மரியாதை உருவாகி இருக்கிறது.
இதுகுறித்து கபில்தேவ் பேசும் பொழுது “விராட் கோலியால் 150 கிலோ எடையை தூக்க முடியும் அதையே ரோகித் சர்மாவும் செய்ய வேண்டும் என்கின்ற அர்த்தம் கிடையாது. ரோகித் சர்மாவுக்கு தன்னுடைய ஆட்டம் குறித்து நன்றாக தெரியும். மேலும் அவர் விராட் கோலி போல் மைதானம் முழுவதும் சுற்றி குதிப்பது கிடையாது. ரோகித் சர்மா தன்னுடைய வரம்புகளை சிறப்பாக அறிந்திருக்கிறார். அவருக்கு சிக்ஸ் பேக் இல்லை ஒரு பேக்தான் இருக்கிறது ஆனால் பெரிய சிக்ஸர்கள் அடிக்க முடியும்.
இதையும் படிங்க : வீரன் இப்படித்தான் இருப்பான்.. ரஷித் கான் செய்த 2 நெகிழ்ச்சியான காரியங்கள்.. கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு
பல பெரிய வீரர்கள் வருகிறார்கள் ஆனால் அவர்கள் தங்களுக்காக வருகிறார்கள். கேப்டன் பொறுப்பையும் செய்கிறார்கள் அதுவும் தங்களுக்காக செய்கிறார்கள். ஆனால் ரோகித் சர்மா அப்படிப்பட்ட ஆள் கிடையாது. அவர் ஒட்டுமொத்த அணியும் மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






