இன்றைய டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்டன. ஏதாவது அதிசயத்தை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்களுக்கு சுருண்டு தென் ஆப்பிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.இந்த போட்டியின் முடிவுக்குப் பிறகு ரஷித் கான் செய்த இரண்டு காரியங்களை கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய அளவில் பாராட்டி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு நாட்டில் இருந்து உருவாகி வந்த அணி, அரையிறுதி சுற்றில் விளையாடுவதற்காகவே தயாரான நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றில் இருந்து வெளியேற்றியது.
மேலும் தற்போது வரை ஐசிசி தொடர்களில் தனி ஒரு அணியாக மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வரும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி, அந்த அணியும் அரையிறுதி சுற்றுக்குள் வராமல் வெளியேற்றியது. இந்த டி20 உலக கோப்பை தொடரை மிகவும் சுவாரசியமாக மாற்றிய அணி ஆப்கானிஸ்தான்தான்.
ஆனால் ஆப்கானிஸ்தான அணி அரையிறுதி சுற்றில் விளையாடுவதற்கு முன்பு பயணத்தில் நிறைய இடையூறுகள் ஏற்பட்டு அவர்களால் பயிற்சி செய்ய முடியவில்லை. இதனால் மைதானத்தின் கண்டிஷனுக்கு அவர்களால் உடனடியாக பழக முடியவில்லை. ஆப்கானிஸ்தான் அணியின் தோல்வியில் இந்த பிரச்சனை முக்கிய பங்கை கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசீது கான் ஒரு இடத்தில் கூட இந்த பிரச்சனை எங்களின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது என்று கூறவில்லை. சில பெரிய கேப்டன்களை கண்டிஷன் மீது பழி சொன்னார்கள். பயண இடையூறுகள் பற்றியும் பேசினார்கள். ஆனால் ரஷித் கான் ஒரு இடத்தில் கூட தோல்விக்கு அதை காரணமாகவே இல்லை.
இதையும் படிங்க : பயம் துரதிஷ்டம் இது முன்ன.. இப்ப நல்லா விளையாடுறதுக்கு காரணம் இது ஒன்னு மட்டும்தான் – ரோகித் சர்மா பேட்டி
மேலும் மிகக்குறிப்பாக ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் ஆங்கிலத்தில் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு, நிகழ்ச்சி தொகுப்பாளர் எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளும் பொழுது, ஒரு நிமிஷம் இருங்கள் என்று கூறிவிட்டு, தங்களுடைய தாய் மொழியில் தங்கள் நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக பேசுவதை ரஷீத் கான் வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் ஆங்கிலம் தெரியாத ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மை மக்கள் தங்கள் அணியின் கேப்டன் தங்கள் மொழியில் பேசுவதை கேட்டு புரிந்து கொள்கிறார்கள். இந்த இரண்டு விஷயங்களும் ரசீத் கான் மீது பெரிய மரியாதையை உருவாக்கி இருக்கிறது. இதை தற்போது ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்!






