ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா நீக்கப்பட வேண்டுமா? என்பது குறித்து கபில்தேவ் மறைமுகமாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீ ரை விமர்சித்து பேசியிருக்கிறார்.
ஏற்கனவே ஹர்ஷித் ராணா இந்திய டி20 அணியில் அறிமுகப்படுத்தப்படாமல், ஐபிஎல் தொடருக்காக அன் கேப்ட்டு பிளேயராக கம்பீரால் வைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரை நேரடியாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு கூட்டி வந்ததும் தற்பொழுது விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
சிறப்பான ஆரம்பமும் திடீர் சரிவும்
ஹர்ஷித் ராணா முதல் டெஸ்ட் போட்டியில் டிராவிட் விக்கெட் உடன் சேர்த்து மொத்தம் மூன்று விக்கெட் கைப்பற்றினார். பிங்க் வந்து பயிற்சி போட்டியில் 6 பந்தில் நான்கு விக்கெட் வீழ்த்தினார். எனவே அவருடைய ஆரம்பம் மிகச் சிறப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் அமைந்திருந்தது.
இப்படியான நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்தில் 16 ஓவர்கள் பந்துவீசி 86 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் ஏமாற்றம் தந்தார். இதன் காரணமாக மூன்றாவது டெஸ்டில் அவரை நீக்கி ஆகாஷ் தீப்பை கொண்டு வர வேண்டும் என்கின்ற பேச்சுகள் அதிகரித்திருக்கின்றது.
ஏற்கனவே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பிங்க் பந்தில் ஆகாஷ் தீப் வலையில் மிகச் சிறப்பாக இருந்ததாகவும், ஆனால் இந்திய அணி நிர்வாகம் ஹர்ஷித் ராணாவை தொடர்ந்து ஆதரித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியான நிலையில் இது குறித்து கபில்தேவ் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: பும்ரா விஷயத்தில் ரகசியம் தெரிஞ்சு போச்சு.. இந்தியா இதை செஞ்சிருக்க கூடாது – டேமியன் பிளமிங் பேட்டி
இதுபற்றி கபில்தேவ் கூறும்பொழுது “நான் இதில் கருத்து சொல்ல யாரும் கிடையாது. அணியில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யக்கூடிய பொறுப்பு அங்குள்ளவர்களிடம் தான் இருக்கிறது. அவர்கள்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். நான் இது பற்றி கருத்து ஏதும் சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன். அவர்கள் சரியான முடிவு எடுப்பார்கள்” என்று நம்புகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.