பும்ரா விஷயத்தில் ரகசியம் தெரிஞ்சு போச்சு.. இந்தியா இதை செஞ்சிருக்க கூடாது – டேமியன் பிளமிங் பேட்டி

0
610
Fleming

ஆஸ்திரேலியா முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேமியன் பிளமிங் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயமடைந்திருக்கிறார் என்று நினைப்பதாகவும் அதற்கான காரணம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இந்திய அணி தற்போது மேற்கொண்டு இருக்கும் ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இந்திய தரப்பில் மிகவும் முக்கியமான வீரராக பும்ரா இருக்கிறார். முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அவரே இருந்து ஆட்டநாயகன் விருதும் வென்று இருந்தார்.

- Advertisement -

இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட பிரச்சனை

கடந்த வாரத்தில் நடைபெற்ற முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இருபதாவது ஓவரை வீசும் போது தொடையில் தசைப்பிடிப்பு அவருக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிசியோ உள்ளே வந்து அவருக்கு சிகிச்சை அளித்தார். இதற்குப் பின்பு அவர் தொடர்ந்து பந்து வீசினார்.

இந்தச் சூழ்நிலையில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் முதல் ஓவரை மட்டுமே பும்ரா வீசினார். மேலும் அந்த ஓவரில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திற்கு உள்ளாகவே மிகவும் மெதுவாக வீசினார். இந்த சூழ்நிலையில் இன்று துவங்கிய முதல் பயிற்சி அமர்வுக்கு பும்ரா வரவில்லை. எனவே இதெல்லாம் பும்ரா குறித்தான கவலையை இந்திய ரசிகர்களுக்கு அளவுக்கு அதிகமாக உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

ரகசியங்கள் வெளிப்பட்டு விட்டது

இது குறித்து டேமியன் பிளமிங் கூறும் பொழுது “பும்ரா விஷயத்தில் சில தீவிரமான சந்தேகங்கள் இருக்க வேண்டும். சிராஜ் பணிச்சுமை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசாமல் போகலாம். ஆனால் பும்ரா அந்த குறிப்பிட்ட ஓவரை வீசியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இதனால் அவர்கள் என்ன பிரச்சனை? என்பதை வெளியில் காட்டி விட்டார்கள்”

இதையும் படிங்க : அடுத்து காபா டெஸ்ட்.. அஸ்வினை மட்டும் தூக்கிடுங்க.. அதுக்கான காரணம் இருக்கு – புஜாரா விளக்கம்

“அவர் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த குறிப்பிட்ட ஒரு ஓவராக ஏன் வீசினார்? என்பது எனக்கு புதிராகவே இருக்கிறது. அவருக்கு முதல் இன்னிங்ஸில் கொஞ்சம் கிராம்ப் இருந்தது. அதற்குப் பிறகு அவர் கொஞ்சம் மெதுவாகவே இருந்தார். இத்தோடு அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசிய முறையில் அவர் குறித்த ரகசியங்கள் வெளிப்பட்டு விட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -